Breaking News
Home / செய்திகள் / முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் !!!

முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் !!!

கொத்தளத்தில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டைக் கொத்தளத்தில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூத்த குடிமக்களின் வயது மூப்பைக் கருத்தில்கொண்டும், கொரோனா நோய் தடுக்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் பத்து சுதந்திரத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார் எனவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster