Breaking News
Home / அரசியல் / ’இந்தி’-யாவா? இது இந்தியாவா? -மு.க.ஸ்டாலின்..

’இந்தி’-யாவா? இது இந்தியாவா? -மு.க.ஸ்டாலின்..

பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க எம்.பி கனிமொழி விமானநிலையத்துக்கு சென்றிருந்தபோது, மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி, ‘உங்களுக்கு இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தை கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதனையடுத்து, இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

 

 

இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக சி.ஐ.எஸ்.எஃப் உறுதியளித்தது. இந்தச் சம்பவத்துக்கு அரசியல்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘இந்தி தெரியாது என்று சொன்னதால், ‘நீங்கள் இந்தியரா?’ என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியைப் பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Thanks to : news 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster