சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களை வரும் 10-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிப்பாட்டிற்காக திறக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கையின் தெரிவித்துள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 10000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் ஆகியவற்றை 10.08.2020 முதல் திறக்கலாம் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாநகராட்சிகளில் ஆட்சியரிடமும் இதற்கான அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop