எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு புதுச்சேரியில் மர்மநபர்கள் காவித்துண்டு அணிவித்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
புதுச்சேரி வில்லியனூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள், காவித் துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர், இச்சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த வில்லியனூர் போலீசார், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இந்நிலையில், திராவிட கொள்கையில் தீவிரமாக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop