நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகனான நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபிஷேக் பச்சனின் மனைவியான முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவர்களது மகளுக்கும் கொரோனா பாதித்தது.
எனினும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சையில் இருந்தனர். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நானாவதி மருத்துவமனையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அறிகுறிகள் தென்பட்டதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop