Breaking News
Home / செய்திகள் / சாத்தான்குளவழக்கில் கைதான போலீசாருக்கு தனி அறை!! பலத்த பாதுகாப்பு!!

சாத்தான்குளவழக்கில் கைதான போலீசாருக்கு தனி அறை!! பலத்த பாதுகாப்பு!!

தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பாதுகாப்பு காரணத்திற்காக நேற்று இரவு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கு மதுரை மத்திய சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் படுகொலை தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர்.

 

Thanks to : news 18

About Admin

Check Also

கோவை மாவட்டத்தை திமுக புறக்கணிக்கிறதா? மாஜி அமைச்சர் வேலுமணி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறியதாவது:கோவைக்கு வந்த ஸ்டாலின் சாலைகளை சீரமைக்க உத்தரவிடுவார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster