மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனி தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நிலையில், மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தனி தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், சுகாதார அதிகாரிள், காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிதாக அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி நியமிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 18-ஆம் தேதி தேனாம்பேட்டை, வளசரவாக்கம், பெருங்குடி மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று திருவொற்றியூர், மாதவரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் இருந்த அதிகாரிகள் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் திருவொற்றியூர் மண்டலத்தில் காமராஜ் ஐ.ஏ.எஸ்.க்கு பதிலாக சுதன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மாதவரம் மண்டலத்தில் ஞானசேகரன் ஐ.ஏ.எஸ்.க்கு பதில் டி.மோகன் ஐ.ஏ.எஸ்.நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் டி.மணிகண்டன் ஐ.ஏ.எஸ்.க்கு பதில் கே.பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
Thanks To: News 18
Rathiri Rounds Never Stop