Breaking News
Home / இந்தியா / வெண்ட்டிலேட்டர் மின் இணைப்பை துண்டித்ததால் கொரோனா நோயாளி பரிதாப மரணம்…

வெண்ட்டிலேட்டர் மின் இணைப்பை துண்டித்ததால் கொரோனா நோயாளி பரிதாப மரணம்…

ராஜஸ்தான் மாநிலத்தில் வென்டிலேட்டருக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வார்டில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்காக அவரது உறவினர்கள் குளிர்சாதன பெட்டியை பொருத்த வென்டிலேட்டருக்கு செல்லும் மின் இணைப்பை தவறுதலாக துண்டித்ததால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள மஹாராவ் பீம்சிங் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை கடந்த 15ம் தேதி அவரது குடும்பத்தினர் பார்க்க சென்றிருந்தனர்.

அவர்கள் உடன் கொண்டு வந்திருந்த குளிர்சாதன பெட்டியை கொரோனா வார்டில் பொருத்துவதற்காக நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவியின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

 

இதையடுத்து, சிறிது நேரத்தில் நோயாளி மூச்சுத்திணறலால் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மருத்துவரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நியமித்துள்ள நிபுணர் குழு இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அதைத்தொடர்ந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

Thanks To: News 18

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster