Breaking News
Home / இந்தியா / எல்லையில் பதற்றம்!! அவசர ஆலோசனைக் கூட்டம்!

எல்லையில் பதற்றம்!! அவசர ஆலோசனைக் கூட்டம்!

இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் முப்படைத் தளபதிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவத்தை சேர்ந்த மூன்று பேர் வீரமரணம் அடைந்துள்ளதாகவும், பிரச்சினையை தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவந்த மேலும் 17 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து, இந்திய வீரர்கள் எல்லையை மீறி சீன வீரர்களை தூண்டியதாகவும், அவர்களை தாக்கியதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த மோதலுக்கு இந்திய தரப்பே காரணம் எனவும் சீனா குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து, முதலில் சீன ராணுவமே அத்துமீறியதாகவும், சீனாவின் நடவடிக்கைகளால்தான் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்தது.

சீனா தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த பதற்றமான சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமீத் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர்

ராஜ்நாத் சிங் ஆகியோர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

Thanks To: Samayam News

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster