Breaking News
Home / அரசியல் / கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி; தி.நகர் முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன்!!

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி; தி.நகர் முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன்!!

சென்னை: திமுக இலக்கிய அணி இணைச்செயலாளரும், சென்னை தியாகராய நகர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார்.. இவர் ஜெயலலிதா மறைந்த பின்னர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்தார்.

அதிமுக சார்பில் சென்னை தியாகராய நகர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தார்.. இவர் ஜெயலலிதா மறைந்த பின்னர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்தார்.

அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தார். இந்நிலையில் டிடிவி தினகரனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவில் இருந்து விலகி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வி.பி.கலைராஜன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விபி கலைராஜனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் விபி கலைராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Thanks To: One india tamil

About Admin

Check Also

சென்னை ‘உஷ்ஷ்ஷ்!’ : இப்படி இருந்தால் கட்சி எப்படி வளரும்?

கட்சி எப்படி வளரும்? அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், நகர்ப்புற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster