Breaking News
Home / இந்தியா / சீன இரண்டாம் பரவல் ஊரடங்கை அமல்படுத்த போகிறதா ?

சீன இரண்டாம் பரவல் ஊரடங்கை அமல்படுத்த போகிறதா ?

சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த 3 நாளில் புதிதாக 9 பேருக்கும் மற்ற பகுதிகளில் 12 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது. பீஜிங்கில் முக்கிய இறைச்சி மார்க்கெட்டுகள் அவசர அவசரமாக மூடப்பட்டுள்ளன. சீனாவின் ஹூபெய் மாகாணம் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பரவி இன்று உலகையே ஆட்டிப் படைக்கிறது. சீனா முழுமையாக இந்த வைரசை கட்டுப்படுத்தியதால், கடந்த ஒரு மாதமாக அந்நாட்டு மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா ஆட்டம் முடிந்து விடவில்லை, இதன் 2ம் கட்ட பரவல் சீனாவை தாக்கலாம் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக அங்கு மெல்ல மெல்ல கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைநகர் பீஜிங்கில் புதிதாக 9 பேருக்கும். மற்ற பகுதிகளில் 12 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சீனா சுகாதாரத் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள இறைச்சி ஆராய்ச்சி மைய ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல், ஜின்பாடி இறைச்சி மார்க்கெட்டில் சிலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

இறைச்சி மார்க்கெட் மூலமாக கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருப்பதால், உடனடியாக ஜின்பாடி, ஜின்ஷான் கடல் உணவு மார்க்கெட்கள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன. அங்குள்ள 6 முக்கிய இறைச்சி மார்க்கெட்டுகள் செயல்பாடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இறைச்சி கடையினர், வாடிக்கையாளர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2ம் கட்ட பரவலை தடுக்க வேண்டுமென்பதற்காக சீனா போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதோடு, சூப்பர் மார்க்கெட், இறைச்சி பதப்படுத்தும் கூடங்கள் ஆகியவற்றை அரசு முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.

மீண்டும் வைரஸ் பரவல் தொடங்கி இருப்பதால், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது. சீனாவில் பரவிய வைரசால் 83,075 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,634 பேர் பலியாகினர். 74 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதில் யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.

பலி எண்ணிக்கையில் பிரேசில் 2வது இடம்
அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலி–்ல் கொரோனா பாதிப்பு படுதீவிரமாக உள்ளது. உலக அளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் 2வது இடத்தில் உள்ளது. அங்கு 8 லட்சத்து 28,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, பலியிலும் அந்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 909 பேர் இறந்த நிலையில், மொத்த பலி 41,828 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், பலி எண்ணிக்கையில் இங்கிலாந்தை முந்தி பிரேசில் 2வது இடத்துக்கு சென்றுள்ளது.

 

Thanks : Dinakaran

About Admin

Check Also

இந்தியாவில் புதுவகை உருமாறிய கொரோனா பாதிப்பில்லை: மத்திய அரசு

புதுடில்லி: தென்ஆப்ரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த புதுவகை கொரோனா தொற்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster