Breaking News
Home / 2021 / November (page 9)

Monthly Archives: November 2021

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில், அரோகரா கோஷம் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, நவ.,10ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நாளான இன்று (நவ.,19) அதிகாலை, 2:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், …

Read More »

இது உங்கள் இடம்: விசாரணை ஆணையம் என்பது மக்களை ஏமாற்றும் வித்தை!

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: எல்.சுரேஷ், பணகுடி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு புரியாது…’ என்ற கவிஞர் வாலியின் வரிகள், தமிழக அரசுக்கு சாலப் பொருத்தம். தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இரண்டும் வேறு கட்சிகள் என்றாலும், அவற்றிற்கு இடையே பல ஒற்றுமைகளும் உண்டு. அதைத் தான், மறைந்த முன்னாள் …

Read More »

வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம்

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் வீடு இடிந்து 9 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டு பகுதியில் நேற்றிரவு (நவ.,18) தொடர்ந்து மழை பெய்தது. இதில், மழை காரணமாக அஜித்தா தெருவில் உள்ள இரு குடும்பத்தினர் ஒரே மாடி வீட்டில் தங்கியுள்ளனர். மழையால், இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. …

Read More »

கிரிக்கெட் வீரர் முரளிதரன் கதையை சினிமாவாக்க விடாமல் தடுத்தீர்களே.. அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம்?: அன்புமணி கேள்வி

சென்னை : ‛‛இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்க முயற்சித்தபோது, தடுத்தீர்களே! அப்போது எங்கே போனது உங்கள் படைப்பு சுதந்திரம்” என்று சினிமா இயக்குனர் பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார் பா.ம.க எம்.பி., அன்புமணி. சூர்யா நடித்து, தயாரித்து நவ., 2ல் ஓடிடியில் வெளியான படம் ‛ஜெய்பீம்’. இப்படத்திற்கு ஒருபக்கம் பாராட்டுகள் கிடைத்தாலும், கடுமையான சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. குறிப்பாக தங்களது சமூகத்தை இழிவுப்படுத்தியதாக பா.ம.க.வின் அன்புமணி மற்றும் …

Read More »

குடும்பத்தினரை அவமதிப்பதா: கதறி அழுத சந்திரபாபு

அமராவதி: சட்டசபையில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கூறி, பத்திரிகையாளர் சந்திப்பில் கதறி அழுத ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ‘இனிமேல் முதல்வராக தான் சட்டசபைக்குள் நுழைவேன், அதுவரையில் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன்,’ என சபதமேற்றுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை சட்டசபையில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவமானப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று (நவ.,19) நடந்த சட்டசபையில் …

Read More »

ஏன் ஹிந்தி மொழியை கற்க கூடாது?: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: ஏன் ஹிந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மத்திய அரசு தனது திட்டங்களை செயல்படுத்தும் போது ஹிந்தியில் தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் போது தமிழக அரசின் அரசாணை, விளம்பரங்கள் மற்றும் செய்தி குறிப்புகளில் மேற்படி ஹிந்தி வார்த்தைகளில் உள்ள …

Read More »

கிருஷ்ணகிரி, திருப்பூரில் மிக கனமழை பெய்யலாம்

சென்னை: கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில், ஈரோடு, …

Read More »

580 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட சந்திர கிரகணம்; இன்று தோன்றுகிறது

புதுடில்லி: கடந்த 580 ஆண்டுகளில் தோன்றக்கூடிய உலகின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (நவ.,19) வானில் தோன்றுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் இதை காணலாம் எனக் கூறப்படுகிறது. சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பொதுவாக ஆண்டுக்கு சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணமும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் …

Read More »

தி.மு.க.,வுக்கு வைகோ திடீர் ‘செக்’

சென்னை : உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வுடன் இடப்பங்கீடு பேச்சு நடத்துவதற்கு முன், அதிக இடங்களை கேட்டு, ‘செக்’ வைக்கும் வகையில், விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று(நவ., 18) அதிரடியாக வெளியிட்டுள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவி பங்கீடு குறித்து தி.மு.க.,விடம் ம.தி.மு.க., இன்னும் அதிகாரப்பூர்வமாக பேச்சு நடத்தவில்லை. ஆனால், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதை விட, அதிக இடங்களில் …

Read More »

இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கோவிட்: 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,106 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது; 12,789 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் நேற்றைய (நவ.,18) கோவிட் நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 98.28 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.37 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.   …

Read More »
MyHoster