சமூக விரோதிகளால் நாங்கள் வீழ்ந்தது புதிதல்ல. ஆனால் நாங்கள் பெரிதும் நேசிக்கும் சிறார்களே இந்த பாதகச் செயலைச் செய்தார்கள் என்பதை எங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் எஸ். பூமிநாதன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடு திருடா்களை விரட்டிச் சென்றபோது அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் …
Read More »Monthly Archives: November 2021
118.34 கோடி ‘டோஸ்’ :கொரோனா தடுப்பூசி
புதுடில்லி : நாட்டில் இதுவரை 118.34 கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரமாக தொடர்கிறது. நேற்று ஒரே நாளில் இரவு 7:00 மணி வரை 71 லட்சத்திற்கும் அதிகமான ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டன. இதையடுத்து, இதுவரை செலுத்தப்பட்ட ‘டோஸ்’களின் எண்ணிக்கை 118.34 கோடியை கடந்துள்ளது என மத்தியசுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Read More »‘சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானம் எச்சரிக்கையுடன் புது மனு தள்ளுபடி
புதுடில்லி :’சென்ட்ரல் விஸ்டா’ எனப்படும் டில்லியில் அமைந்து வரும் புதிய பார்லிமென்ட் வளாகம் தொடர்பான புதிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. டில்லியில் ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில், புதிய பார்லிமென்ட் வளாகம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்நிலையில் புதிய வளாகத்தில், …
Read More »தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 741 ஆக சற்று குறைந்துள்ளது: 808 பேர் நலம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 750 -ல் இருந்து 741 ஆக சற்று குறைந்துள்ளது. 13 பேர் உயிரிழந்து உள்ளனர். 808 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,00,817 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 741 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் …
Read More »தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை : அமைச்சர் பெரியசாமி
சென்னை: தக்காளி விலையை குறைக்க கூட்டுறவுத்துறை நுகர்வோர் கடைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: மழைக்காலத்தை முன்னிட்டு வெளி சந்தையில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தக்காளிகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தக்காளிகளை தேவைக்கு ஏற்ப கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விற்பனை …
Read More »நவ., 26 முதல் அலைபேசி கட்டணங்கள் 25% வரை உயர்கிறது!
புது டில்லி: அலைபேசி சேவை வழங்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. நவ., 26 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.50 கூடுதலாக செலவழிக்க வேண்டி இருக்கும். தற்போது 28 நாட்களுக்கு தினசரி ஒரு ஜி.பி., டேட்டா மற்றும் வரம்பின்றி அழைப்புகளை மேற்கொள்ள ரூ.219 வசூலிக்கப்படுகிறது. அதுவே தினசரி 1.5 ஜி.பி., என்றால் ரூ.249-ம், …
Read More »இன்று சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலம்
புட்டபர்த்தி: சத்ய சாய்பாபாவின் 96 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசாந்தி நிலையத்தின் பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. தொடர்ந்து ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. சத்ய சாய் டிரஸ்ட் மற்றும் அறக்கட்டளையின் மூத்த நிர்வாகிகள் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள், சத்யசாய்பாபா மீதான அன்பை வெளிப்படுத்தவும், அவரிடம் ஆசி பெறவும் சாய் சன்னதியில் ஒன்று …
Read More »இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ‛ஹலால்’ உணவு கட்டாயமா: பிசிசிஐ விளக்கம்
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உணவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதனால், வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சுழற்சி முறையில் வீரர்களை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வீரர்களின் உணவு விஷயத்திலும் பிசிசிஐ கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்தி வெளியானது. …
Read More »சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: 5 பேர் பலி
சேலம்: சேலத்தில் சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஐந்து பேர் உயிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதர் கோவில் தெருவில் இன்று (நவ.,23) காலை 6.30 மணிக்கு சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய 5 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 10 நபர்களை மீட்கும் …
Read More »தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: ‛‛மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,” என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: தெற்கு வங்கக் கடற்பகுதியல் (5.8 கிலோமீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு …
Read More »
Rathiri Rounds Never Stop