சென்னை : முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழக – கேரள முதல்வர்கள் பேச்சு நடத்தும் தேதி நவ.14ல் நடக்க உள்ள தென்மாநில முதல்வர் மாநாட்டின் போது முடிவு செய்யப்பட உள்ளது. முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கேரள அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக – கேரள முதல்வர்கள் இடையே டிசம்பரில் சென்னையில் பேச்சு நடத்தப்படும் என கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி …
Read More »மழை நீர் தேங்காமல் இருக்க விரைவில் நிரந்தர தீர்வு: கனிமொழி
சென்னை: ”சென்னையில் மழை நீர் தேங்காமல் இருக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும்,” என தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி., கூறினார். சென்னை தி.நகரில், தனியார் அறக்கட்டளை சார்பில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவி பொருட்களை வழங்கும் பணியை கனிமொழி நேற்று துவக்கி வைத்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: சென்னையில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி, காட்சி …
Read More »கனமழை எதிரொலி: 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக சென்னை, சேலம், கடலூர் உள்ளிட்ட 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதி கனமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று கரையை கடக்கும் என்றும், …
Read More »காவலன் செயலி: டி.ஜி.பி., சைலேந்திர பாபு அறிவுரை
சென்னை : பெண்கள் அவசர காலங்களில் காவல் உதவிக்காக ‘காவலன் எஸ்.ஓ.எஸ்.’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ‘பெண்கள் தனியாக ஆட்டோவிலோ கார்களிலோ பயணம் செய்யும் முன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை 99697 77888 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். ‘காவல்துறை அந்த வாகனத்தை ஜி.பி.ஆர்.எஸ். வாயிலாக கண்காணிக்கும். இந்த தகவலை அனைத்து தளங்களிலும் பகிரவும்’ என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு …
Read More »உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியல்; புதிதாக பெயர்களை சேர்க்க முடியுமா?
சென்னை : ‘இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் பெயர்கள் தான் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்’ என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆணையத்தின் அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக மாநில தேர்தல் ஆணையம் தயாரித்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 1ம் தேதி வெளியிட்டுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் …
Read More »தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 828 ஆக சற்று குறைந்துள்ளது: 931 பேர் நலம்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 835 -ல் இருந்து 828 ஆக சற்று குறைந்துள்ளது. 9பேர் உயிரிழந்து உள்ளனர். 931 பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,143 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 828 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப் …
Read More »சென்னையில் 8 விமானங்கள் ரத்து
சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து கிளம்பும் மற்றும் சென்னைக்கு வரும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி, மும்பை, ஷார்ஜா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »சேதாரம் இல்லாத சென்னை: முதல்வர் ஸ்டாலின் ஆசை
சென்னை: மழைக்காலம் முடிந்த உடன், நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையை உருவாக்குவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஸ்டாலின் 4வது நாளாக ஆய்வு செய்தார். தி.நகர் விஜயராகவா சாலையில் மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அவர், மாம்பல் கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் லஞ்சம் வாங்கி ஊழல் செய்து, கமிஷன் …
Read More »பாலாற்று நீரை 324 ஏரிகளில் நிரப்பும் பொதுப்பணித்துறைக்கு சபாஷ்: ஒரு நாளைக்கு 1.7 டி.எம்.சி., தண்ணீர் வீணாக கடலில் கலப்பு
பாலாற்றிலிருந்து, வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலந்து வருவதால், நான்கு வகையான கால்வாய்கள் மூலம், பாலாற்று வெள்ள நீரை மடை மாற்றி, 324 ஏரிகளுக்கு பொதுப்பணித் துறையினர் நிரப்பி வருகின்றனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், காஞ்சிபுரம் அடுத்த பெரும்பாக்கத்தில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாகவே, காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. பாலாற்றில், 20 நாட்களுக்கு முன்பாக, வினாடிக்கு 2,000 …
Read More »மயிலாடுதுறை, திருவாரூரில் விடிய விடிய கனமழை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விடியவிடிய பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு, சீர்காழி தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகரில் மழைநீர் வடிகால் வசதியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சம்பா நாற்றுகள் நடவு பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் தொடர் கனமழை பெய்து வருவது விவசாயிகள் இடையே …
Read More »
Rathiri Rounds Never Stop