Breaking News
Home / உலக செய்திகள் (page 5)

உலக செய்திகள்

உலக செய்திகள்

ஈரான் ராணுவம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கக் கருவூலத்துறை ஈரான் ராணுவம் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளது.

இதுகுறித்து அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சவூதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது கடந்த 2019ம் ஆண்டு ஆளில்லா விமானத் தாக்குதலை ஈரான் ராணுவம் நடத்தியது. 2021ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி ஓமன் கடற்கரையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான நிறுவனத்தால் இயக்கப்படும் மெர்சர் ஸ்ட்ரீட் வணிகக் கப்பலின் மீதும்ஈரான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.

latest tamil news

ஈரானின் ட்ரோன்கள், ஹமாஸ், ஹவுத்தி போன்ற கிளர்ச்சியாளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, ஈரான் ராணுவ ட்ரோன் பிரிவின் மீதும், ஈரான் ராணுவத்தின் புரட்சிகரப் பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவர் அகாஜானி மீதும் புதிதாகப் பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் மீண்டும் ஈரான் மீது அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெஹ்ரானுக்குத் தெற்கே போர்டோ என்ற இடத்தில் மலைக்கு அடியில் உள்ள ஆலையில் 2015-ல் நிறுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

வாடிகனில் போப் பிரான்சிஸ் – பிரதமர் மோடி சந்திப்பு

வாடிகன் சிட்டி: ‛ஜி 20′ மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார்.

latest tamil news

 

 

இத்தாலி தலைநகர் ரோமில் ‛ஜி20′ அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றடைந்தார்.

latest tamil news

 

முதல் நிகழ்ச்சியாக, ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்தித்தார். பின்னர், ரோம் நகரில் உள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

 

 

 

இதை தொடர்ந்து, வாடிகன் நகருக்கு மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் போப் பிரான்சிசை மோடி சந்தித்து பேசினார்.

 

 

பிரதமருடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின் போது, கோவிட், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

 

 

இந்தியா வர அழைப்பு

 

latest tamil news

 

 

போப் பிரான்சிசை சந்தித்த பிறகு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பு வெகுசிறப்பாக அமைந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.,30 வரை தடை நீட்டிப்பு

புதுடில்லி : நம் நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கொரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

latest tamil news

இந்நிலையில் சர்வதேச விமான இயக்கத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உட்பட 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் கூடிய சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தடை சரக்கு விமாங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

அமெரிக்க பில்லியனர்களுக்கு தனி வரி: முட்டாள்தனமானது என கோடீஸ்வரர்கள் எதிர்ப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஆளும் ஜனநயாகக் கட்சியின் செனட்டர், கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கு 20 சதவீத மூலதன ஆதாய வரி மற்றும் நிகர முதலீட்டு வருமானத்தில் 3.8% வருமான வரி விதிக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். இத்தகவல் வெளியான நிலையில் இந்த வரி விதிப்பு முட்டாள்தனமானது, பைத்தியக்காரத்தனமானது என கோடீஸ்வரர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அரசின் வருவாயை அதிகரிக்க கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கும் வரி விதிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகின்றனர். தற்போது அக்கட்சி வெற்றி பெற்று பைடன் அதிபராக உள்ளார். இதனால் கோடீஸ்வரர்களின் சொத்துக்களுக்கு வரி விதிக்கும் மசோதாவை கொண்டு வர முயல்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க செனட்டின் நிதிக் குழு தலைவரும், ஜனநாயகக் கட்சியின் செனட்டருமான ரான் வைடன் 700 பில்லியனர்களிடம் வரி விதித்து, அதன் மூலம் அதிபரின் பொருளாதார கொள்கைகளுக்கு உதவும் திட்டத்தை முன் மொழிந்துள்ளார். அவர் வெளியிட்ட திட்டத்தில், 100 கோடி டாலர் மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து வைத்திருப்பவர்கள், அல்லது தொடர்ந்து மூன்று வருடங்கள் 10 கோடி டாலர் அல்லது அதற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களிடம் 20 சதவீத மூலதன ஆதாய வரி வசூலிக்க வேண்டும். நிகர முதலீட்டு வருமானத்தில் 3.8% வரி விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வரி விதிப்பின் கீழ் சுமார் 800-க்கும் குறைவானவர்கள் வருவார்கள். தங்களது பங்குகளை வர்த்தகம் செய்யாவிட்டாலும் வரி விதிக்கப்படும் என புதிய திட்டத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி டாலர்கள் திரட்ட முடியும் என இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த நிதியை காலநிலை மாற்றத்துக்கு எதிரான பணிகளுக்கும், உலகளாவிய அளவில் மழலையர் பள்ளி கல்வி வழங்குதல், சுகாதாரத் திட்டங்களை விரிவுப்படுத்துதல் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

latest tamil news

இந்த திட்டத்திற்கு எதிராக குடியரசுக் கட்சியினர் ஒன்றுபட்டுள்ளனர். சிலர் இத்திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடப்போவதாக கூறியுள்ளனர்.

உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவரும், டெல்ஸா நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் பலர் இத்திட்ட முன்மொழிவை எதிர்த்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் மற்றும் பல்பொருள் தொடர் அங்காடியில் கோலோச்சும் கோடீஸ்வரர் ஜான் காட்ஸிமாடிடிஸ், “இந்த வரி விதிப்பு கொஞ்சம் பைத்தியக்காரத்தனமானது. அவர்கள் பணத்தை முட்டாள்தனமான பட்ஜெட்களுக்கு செலவிடுகிறார்கள். அதற்காக எல்லாரையும் தொந்தரவுக்குள்ளாக்குகிறார்கள். பணத்தை முட்டாள்தனமாக செலவழிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்” என கூறுகிறார்.

 

‘ஏர்போர்ட்’டில் 3 மாதம் ரகசியமாக வசித்த இந்தியர் விடுதலை

நியூயார்க்: அமெரிக்க விமான நிலையத்தில் ரகசியமாக மூன்று மாதங்கள் வசித்த குற்றச்சாட்டில் கைதான இந்தியரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஆதித்ய சிங், 37, ஆறு ஆண்டுகளுக்கு முன், உயர் கல்விக்காக அமெரிக்கா சென்றார். அங்கு படிப்பு முடிந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஒரு நண்பரின் வீட்டில் வசித்து வந்தார்.

 

சிக்கினார்

நண்பரின் வயது முதிர்ந்த தந்தையை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்த ஆதித்ய சிங், 2020 அக்., 19ல் இந்தியா திரும்புவதற்காக சிகாகோவின் ‘ஓ ஹேர்’ விமான நிலையம் வந்தார்.இந்தியாவில் கொரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக விமானத்தில் ஏறாமல், விமான நிலையத்திலேயே தங்கி விட்டார். அங்கேயே, கண்காணிப்பு கேமரா உட்பட யார் கண்ணிலும் படாமல் வசித்து வந்தார்.

விமான பயணியரிடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை கழித்து வந்த ஆதித்ய சிங், ஒரு நாள் விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கினார். அப்போது அவர், விமான நிலைய மேற்பார்வையாளர் ஒருவரின் அடையாள அட்டையை காண்பித்துள்ளார்; அது, காணாமல் போனதாக புகார் கொடுத்த விமான நிலைய அதிகாரி ஒருவரின் அடையாள அட்டை என்பது தெரிய வந்தது.

latest tamil news

இது தொடர்பான புகாரில், இந்தாண்டு ஜன.,16ல் ஆதித்ய சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது சட்ட விரோதமாக விமான நிலையத்திற்குள் வசித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பு கூறப்படும் வரை அவருக்கு விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

 

நிராகரிப்பு

அதில், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஆதித்ய சிங் சென்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்து, அவரை நீதிமன்றம் விடுவித்தது. எனினும் ஆதித்ய சிங், நீதிமன்ற உத்தரவை மீறி ஒரு முறை விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில், ஆதித்ய சிங்கிற்கு தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.ஆதித்ய சிங்கின் கதையைப் போல சில ஆண்டுகளுக்கு முன், ‘ஹாலிவுட்’ நடிகர் டாம் ஹாங்க்ஸ் நடித்த தி டெர்மினல் என்ற படம் வெளியாகி வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க பார்லிமென்டில் தீபாவளி; எம்.பி.,க்கள் உற்சாக பங்கேற்பு

வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க பார்லிமென்டிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்.அந்த வகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன், அமெரிக்க எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.

‘இன்டியாஸ்போரா’ அமைப்பு, அமெரிக்க இந்தியர் அமைப்புகளுடன் இணைந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ”ஹிந்து அமெரிக்க கலாசாரம், அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது,” என, பார்லி., உறுப்பினரான ரோ கன்னா குறிப்பிட்டார்.

 

latest tamil news

 

இன்டியாஸ்போரா அமைப்பின் நிறுவனர் எம்.ஆர். ரங்கசாமி, இந்தியாவை பூர்வீக மாக உடைய எம்.பி.,க்களான டாக்டர் அமி பேரா, பிரமிளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தில் உயர் பதவியில் உள்ள இந்தியாவை பூர்வீகமாக உடைய நீரா டான்டன், விவேக் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அமெரிக்க பெண் எம்.பி.,யான கரோலின் மலோனியும் பங்கேற்றார். இவருடைய முயற்சியால் 2016ல் தீபாவளி குறித்த சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. ”தீபங்களின் பண்டிகையான தீபாவளியை மேலும் சிறப்பிக்கும் வகையில், பொது விடுமுறை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் குறிப்பிட்டார். 

 

ரஷ்யாவில் 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,159 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

latest tamil news

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா. ஆனால், ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாது உள்நாட்டிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் காத்திருக்கின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தபோதிலும் ரஷ்யாவில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணம் செய்யவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூரில் சில மணிநேரத்தில் அதிகரித்த கொரோனா..!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (அக்.,28 ம் தேதி) காலைமுதல் திடீரென கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது அந்நாட்டு சுகாதார துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கொரோனாவின் டெல்டா ரகம் தற்போது சீனா மற்றும் இதர தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. முன்னதாக சீனாவில் வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பல மாகாண எல்லைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள வேற்று நாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் விடுதிகளில் வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மணி நேரங்களிலேயே 5,324 பேர் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுள் 66 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 76 பேர் மிதமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

latest tamil news

முன்னதாக சிங்கப்பூர் அரசு வைரஸ் தாக்கம் குறைந்ததால் மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் வெளிநாட்டு பயணிகளை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது திடீரென வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்தியா – ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும்: பிரதமர்

புதுடில்லி: ‛‛இந்தியாவிற்கும், ஆசியான் அமைப்பிற்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் எனவும், வருங்காலங்களில் அது தொடரும்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா- ஆசியான் 18 வது உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: கோவிட் காரணமாக நாம் பல சவால்களை சந்தித்தோம். இந்த சவாலான நேரத்தில், இந்தியா ஆசியான் நட்புறவுக்கு சோதனை காலமாக அமைந்தது. இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவு மேலும் வலுப்பெறும். எதிர்காலத்திலும் தொடரும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா- ஆசியான் இடையே துடிப்பான உறவு உள்ளதற்கு சாட்சியாக வரலாறு உள்ளது. ஆசியான் நாடுகளின் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு முக்கியமானது. மரபுகள், பாரம்பரியம், மொழிகள், நூல்கள், கட்டடக்கலை, உணவு உள்ளிட்டவற்றில் இந்தியாவும், ஆசியான் நாடுகளும் பல அம்சங்களை பகிர்ந்து கொள்கின்றன.

latest tamil news

இந்தியா – ஆசியான் கூட்டணி, 2022ல் 30 ஆண்டு நிறைவு செய்கிறது. அதேநேரத்தில் இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும். இதனை, இந்தியா- ஆசியான் நட்புணர்வு ஆண்டாக கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டம் அமல்படுத்த சிறப்பு குழு: தமிழர்களுக்கு இடமில்லை

கொழும்பு: இலங்கையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க சர்ச்சைக்குரிய புத்த துறவி தலைமையில் 13 உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார்.

அண்டை நாடான இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 24ல் மூன்று சர்ச்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 11 இந்தியர்கள் உட்பட 270 பேர் இறந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இலங்கையில் செயல்படும் அமைப்பே காரணம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து ‘இலங்கையில் ‘ஷரியத்’ சட்டத்தை பின்பற்றுவதை தடை செய்ய வேண்டும். ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் இலங்கையில் 2019ல் நடந்த அதிபர் தேர்தலில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவோம்’ என கோத்தபய ராஜபக்சேவும் அவரது எஸ்.எல்.பி.பி. எனப்படும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியும் வாக்குறுதி அளித்தன.பெரும்பான்மையான புத்த மதத்தினரின் ஓட்டுகளை பெறும் நோக்கில் இந்த கோஷம் முன் வைக்கப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதிபராக கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். எஸ்.எல்.பி.பி. கட்சி ஆட்சியை பிடித்தது. பிரதமராக மகிந்தா ராஜபக்சே பதவியேற்றார்.

இந்நிலையில் ஒரு நாடு; ஒரே சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாவை தயாரிக்க 13 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ளார். இக்குழுவின் தலைவராக சர்ச்சைக்குரிய புத்தமத துறவி ஞானசரா நியமிக்கப்பட்டுள்ளார்.

latest tamil news

இலங்கையில் 2013ல் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஞானசராவின் பி.பி.எஸ். எனப்படும் ‘போடு பால சேனா அமைப்பு’ தான் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே அதிபர் அமைத்துள்ள 13பேர் அடங்கிய சிறப்பு குழுவில் நான்கு முஸ்லிம் அறிஞர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் தமிழர்கள் ஒருவர் கூட இடம் பெறவில்லை.

 

MyHoster