மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி, இரண்டாவதாக தன் குடும்பத்தினருக்காக ஒரு வீட்டை தயார் செய்து வருகிறார். ஆனால், இம்முறை இந்த வீடு இந்தியாவில் இல்லை; லண்டனில். அதேநேரத்தில், லண்டனில் முகேஷ் அம்பானி குடியேற போவதாக வெளியான தகவலையும் மறுத்துள்ளது.
லண்டன் பக்கிங்காம்ஷயரில் இருக்கும், 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ‘ஸ்டோக் பார்க்’ வீட்டை தயார் செய்து வருவதாக, ‘மிட் டே’ பத்திரிகை தெரிவித்துள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, மும்பையில் மிகப்பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ‘அல்டாமவுன்ட்’ சாலையில், ‘அன்டிலியா’ எனும் பெயரில் மிகப்பெரிய வீடு உள்ளது.

கொரோனாவை முன்னிட்டு, அம்பானி குடும்பத்தினர் தங்களுடைய பெரும்பாலான நேரத்தை இந்த வீட்டிலேயே செலவிட்டனர். இதையடுத்து, லண்டனில் உள்ள வீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த வீட்டை, இவ்வாண்டின் துவக்கத்தில் தான், 592 கோடி ரூபாய்க்கு அம்பானி வாங்கினார். இந்த வீட்டில் மொத்தம் 49 படுக்கை அறைகள் உள்ளன. சிறப்பான மருத்துவ வசதிகளையும், இந்த ஆடம்பர வீடு கொண்டுள்ளது.
இதையடுத்து, முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் அங்கு குடியேற உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவின.
இதனை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டனில் குடியேற உள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மை இல்லை. அவை தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற யூகங்கள் அடிப்படையில் வெளியான செய்திகள். அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் லண்டன் அல்லது உலகில் வேறு எங்கும் இடம் பெயரவோ அல்லது வசிக்கவோ எந்த திட்டமும் இல்லை. ஸ்டான் பார்க் பங்களாவை, முதன்மையான கோல்ப் மற்றும் விளையாட்டு ரிசார்ட்டாக மேம்படுத்துவதை நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
Rathiri Rounds Never Stop










