புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட் பரிசோதனை தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் வழிகாட்டு நெறிமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த ஏதேனும் தடுப்பூசியை இரு தவணையும் செலுத்தி 15 நாட்கள் ஆகி இருக்க வேண்டும்.

அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முன்போ அல்லது வருகைக்கு பின்னரோ கோவிட் பரிசோதனை தேவையில்லை. அதேநேரத்தில், வருகைக்கு 14 நாட்களுக்கு உள்ளாக அவர்களுக்கு ஏதேனும் கோவிட் அறிகுறிகள் தென்பட்டாலும் அவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இது இன்று (நவ.,12) முதல் நடைமுறைக்கு வரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rathiri Rounds Never Stop













