மேட்டுப்பாளையம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. தற்போது சுட்டெரிக்கும் வெயில் அடிப்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் காட்டுயானைகள் வனப்பகுதியையொட்டி கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும், காட்டு யானைகள் தாக்குகின்றன. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. உணவு மற்றும் …
Read More »ரேஷன் கடைகளில் வினியோகிக்க நிவாரண பொருட்களை பொட்டலமிடும் பணி மும்முரம்
கோவை, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு கடந்த மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் இலவச பொருட்கள் 4-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 23 ஆயிரம் அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 2-ந்தேதி முதல் டோக்கன் இதன்படி ரேஷன் …
Read More »போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் கிடக்கும் முட்டைகோஸ்கள் – விவசாயிகள் கவலை
கோவை, கோவை மாவட்டத்தில் ஆலாந்துறை, நரசீபுரம், செம்மேடு, வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 1,500 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது முட்டைகோஸ் அறுவடை செய்யும் நேரம் ஆகும். அறுவடை நேரத்தில் வியாபாரிகள் தோட்டங்களுக்கு சென்று முட்டைகோசை வாங்கிச்செல்வார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு என்பதால், வியாபாரிகள் அதிகம் வருவது இல்லை. இதனால் அறுவடை செய்த முட்டைகோசை விற்பனை செய்ய முடியவில்லை. அத்துடன் போதிய விலையும் …
Read More »கோவையில் பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா
கோவை, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் போலீசாருக்கு கொரோனோ தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போலீசாருக்கு அவ்வப்போது உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் அன்னூர்-அவினாசி ரோடு கஞ்சப்பள்ளி சோதனைச்சாவடியில் பணிபுரிந்த 39 வயது பெண் போலீஸ் ஏட்டுக்கு காய்ச்சல், தொண்டை …
Read More »கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் தடையை மீறிய 825 பேர் கைது
கோவை: கோவை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக நாளுக்கு நாள் கைதாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 825 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 746 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை புறநகரில் மட்டும் ரூ.20,8900 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கோவை மாநகரில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் வந்ததாக 64 பேர் மீது தொற்று நோய் தடுப்பு …
Read More »சோதனை சாவடியில் பணியாற்றிய பெண் போலீஸ் ஏட்டுக்கு கொரோனா பாதிப்பு
அன்னூர்: கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அன்னூர்-அவினாசி ரோடு கஞ்சப்பள்ளி சோதனைச்சாவடியில் பணிபுரிந்த 39 வயது பெண் போலீஸ் ஏட்டு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருந்ததாக தெரிகிறது. …
Read More »கோவை மாவட்டத்தில் ஊரடங்கு – பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்
கோவை: கொரோனா பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதையும் மீறி வெளியே வருபவர்களை போலீசார் தண்டனை வழங்கியும், நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதவிர பேரிடர் மீட்புக்குழுவினரும் …
Read More »கோவையில் பரபரப்பு: 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; சிறுவர்கள் உள்பட 7 பேர் போக்சோவில் கைது
கோவை, கோவையைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவரின் 16 வயது மகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வயிற்றுவலி காரணமாக கடந்த 11-ம் தேதி தனது தாயாருடன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளை செய்தனர். அதில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு மாணவி மற்றும் அவரின் தாயார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து டாக்டர்கள் அந்த மாணவியை …
Read More »கோவையில், ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா உறுதி
கோவை, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டி படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் கொரேனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பிரத்யேகமாக …
Read More »கொரோனா தடுப்பு நடவடிக்கை: விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
கோவை, இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் மத்திய அரசு அலுவலகங்களில் மொத்தம் உள்ள ஊழியர்களில் 50 சதவீத பேர் ஒருவாரம் பணியாற்ற வேண்டும் என்றும், மீதியுள்ள 50 சதவீதம் பேர் விடுமுறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி வருமான வரி அலுவலகம், வங்கிகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள போலீசாரில் மூன்றில் ஒரு பங்கு போலீசார் 7 நாட்கள் விடுமுறையில் இருக்க …
Read More »
Rathiri Rounds Never Stop