Breaking News
Home / கோயம்புத்தூர் (page 4)

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

வரதட்சணை கேட்ட மாமியார்; ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய பெண் ..

கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சனை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர். கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள் காந்திபுரம் 7 வது வீதியில் பஞ்சரத்தினம் ஜெம்ஸ் என்ற பெயரில் ராசிக்கல் ஜோதிட நிலையம் நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ரித்தீஷ் என்பவருக்கும், சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னப்பூரணிக்கும் கடந்த …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More »

கனமழையால் இடிந்து விழுந்த வீடு !! – கோவை..

கோவையில் கனமழை காரணமாக செட்டி வீதியில் உள்ள வனஜா என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டடம் நேற்றிரவு இடிந்தது. அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்தது. உடனடியாக தீயணைப்பு, மீட்புப்பணி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். இடிபாடுகளில் 8 பேர் சிக்கிக்கொண்டதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்தது. ஸ்வேதா …

Read More »

கோவையில் இன்று மாலை தளர்வுகளற்ற ஊரடங்கு!!

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோவையில் இன்று மாலை 5 மணியில் இருந்து திங்கள் கிழமை காலை 6 மணி வரை தளர்வுகளற்ற முழு ஊடரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் இன்று மாலை 5 மணியில் இருந்து வரும் திங்கள் காலை 6 மணி …

Read More »

பெரியார் சிலை மீது காவிசாயம் விவகாரம் ; அருண் கிருஷ்ணன் போலீசில் சரண் ..

கோவை சுந்தராபுரம் பகுதியில், திராவிடர் கழகம் நிறுவிய தந்தை பெரியார் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்களால் காவி சாயம் பூசப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசப்பட்டதற்கு அரசியல்கட்சி தலைவர்கள் ஸ்டாலின், ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.   இந்நிலையில், போத்தனூர் அண்ணாநகர் பகுதியை …

Read More »

பெரியார் சிலை மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்கள்!!

கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் காவி பெயிண்ட் ஊற்றியுள்ளனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கந்த சஷ்டி கவசத்தில் வரும் வரிகள் குறித்து அவதூறாக பேசியதாக கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் மற்றும் அதன் தொகுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக குரல் எழுப்பிவந்தனர். நேற்று, தமிழகம் முழுவதும் பா.ஜ.கவினர் …

Read More »

கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!!

கோவையில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அண்மையில் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் மீது கடும் நடடிவக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையால் பூஜ்ஜியம் என்ற நிலைக்கு வந்தது. ஆனால், மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். ஜூன் 20-ம் தேதி முதல் கோவை மாநகராட்சி எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு, அனைவருக்கும் …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

பொள்ளாச்சியில் புகையிலையை பதுக்கி விற்ற குடோனுக்கு ‘சீல்’

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடோன்களில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சுப்புராஜ், சிவானந்தம், கிழக்கு போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், அழகேசன் ஆகியோர் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது, கோட்டூர் சாலையில் உள்ள மளிகை ஸ்டோர் …

Read More »

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் சிறப்பு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அதிகாரிகள் ஆய்வு

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை யடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, மேட்டுப் பாளையம், சிறுமுகை, மதுக்கரை, குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, உக்கடம் உள்பட 18 பகுதிகள் நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு மண்டல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக அரசு சுரங்கத்துறை இயக்குனர் …

Read More »
MyHoster