Home / Tag Archives: #tn cm

Tag Archives: #tn cm

புதிய ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..

தமிழகத்தில் டிசம்பர் 31 வரை பொது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வந்த பொது ஊரடங்கு, டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சம் …

Read More »

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை…

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் 176 ஆய்வகங்களில் தினமும் 85,000 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இதற்காக நாளொன்றுக்கு 6 கோடியே 80,00,000 ரூபாய் செலவிடப்படுவதாகவும், நிதி நெருக்கடியான …

Read More »

அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை..

கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சோதனை முறையில் அமலாக்கப்பட்டதையடுத்து, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திட்டம் …

Read More »

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ -முதல்வர் அறிவுப்பு ..

பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் ‘மினி கிளினிக்’ அமைக்க திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கே.சண்முகம், போலீஸ் …

Read More »

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் ..

ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையால் அதிகமாக கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தமிழக மாவட்டங்கள் பாதிக்கும் என்பதால், மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னுரிமை வாய்ந்த துறைகள் எனப்படும் விவசாயம், கல்வி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாவட்டங்களுக்கு ரிசர்வ் வங்கிக் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் கடன் அதிகம் பெறும் மாவட்டங்களுக்கு கடன் அளவைக் குறைக்கவும், குறைவாக கடன் பெறும் மாவட்டங்களுக்கு வளர்ச்சி பணிகளுக்காக கடன் அளவை அதிகரிக்கவும் …

Read More »

கண்தானம் செய்தார் முதல்வர்…

தேசிய கண் தான தினம் நாளை கடைபிடிக்கப்படவுள்ளநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய கண்களைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தேசிய அளவில் நாளை கண் தான தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதனை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில், கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், http://hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கண்தானம் செய்பவர், தானம் பெறுபவர் என ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் திறந்துவைக்கும் நிகழ்வின்போது, முதல்வர் அவருடைய கண்களைத் தானம் செய்வதாக தெரிவித்து அதற்கான உறுதிமொழி அளித்து அந்தச் சான்றிதழை …

Read More »

முதல்வர் மீண்டும் ஆலோசனை!!

தமிழகத்தில் நான்காம்கட்ட பொதுமுடக்க தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், கொரோனா நிலவரம் குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ( செப்டம்பர் 8) மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் நான்காம்கட்ட பொதுமுடக்க தளர்வுகளை அரசு கடந்த வாரம் (ஆகஸ்ட் 30) அறிவித்தது. இதன்படி மாநிலத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவையும் நாளை மறுநாள் (செப்டம்பர் 7) முதல் தொடங்கப்பட உள்ளது. அத்துடன், சிறப்பு ரயில் போக்குவரத்தும், சென்னையில் …

Read More »

முதல்வருக்கு விஜய் ரசிகர்கள் கேள்வி ?

திரையரங்குகள் திறப்பது எப்போது என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பும் விதமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் திருமண நாளை ஒட்டி மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கில்லி சிவா, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல் விஜய் மற்றும் சங்கீதாவை சித்தரித்து ஒட்டிய போஸ்டரின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு …

Read More »

முதலமைச்சருக்காக விதவிதமான போஸ்டர்களை ஒட்டும் மாணவர்கள்..

கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்த மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமான கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளைத் தவிர்த்த மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சியடைந்ததாக தமிழக அரசு அறிவித்தது. இதனை வரவேற்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவையில் பல முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அதில் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு …

Read More »

முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்..

தமிழகத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார், எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. இந்த நிலையில், அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, இனி பாஜக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என கூறியிருந்தார். மேலும், தமிழகத்தில் ஆறு …

Read More »