திரையரங்குகள் திறப்பது எப்போது என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பும் விதமாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் திருமண நாளை ஒட்டி மதுரை தெற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் கில்லி சிவா, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவைப் போல் விஜய் மற்றும் சங்கீதாவை சித்தரித்து ஒட்டிய போஸ்டரின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சை போஸ்டரை மதுரை முழுவதும் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை தியேட்டர் திறப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. முதல்முறையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதத்திலிருந்தே திரையரங்கு மூடியிருப்பதால் ஏப்ரலில் திரைக்கு வர வேண்டிய விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இதுவரை வெளியாகாமல் உள்ளது.
இதனிடையே இத்திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடப் போவதாக அவ்வப்போது தகவல்கள் கசிந்து வந்தாலும் கொரோனா பிரச்னை முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் தியேட்டரில் தான் படத்தை வெளியிடுவோம் என்பதில் படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக இருக்கிறார். அதேபோல் தியேட்டரில் தான் மாஸ்டரை பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்பொழுது தமிழக அரசின் அறிவிப்பில் தியேட்டர் திறப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இடம் பெறாததால், கொதித்து எழுந்த கில்லி சிவா, மதுரை நகர் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தையும், அதிமுகவின் கொடி வண்ணத்தையும் பயன்படுத்தி போஸ்டர் ஒட்டி உள்ளார்.
அதில், ‘கொரோனா மறந்தாச்சு… இயல்பு நிலை வந்தாச்சு… திரையரங்கு என்ன ஆச்சு..’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளன. மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop