Breaking News
Home / Tag Archives: #neet exam

Tag Archives: #neet exam

நீட் தேர்வில் வெற்றிபெற்றும் மருத்துவக் கல்வியில் சேர முடியாமல் தவிக்கும் பட்டியலின மாணவி !!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு மருத்துவக் கல்வி இடம் தருமாறு கல்வியாளர்கள் கோரியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை இலவசமாக கல்வி பயின்ற மாணவி சந்திரலேகா, அருகிலுள்ள முருங்கம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பயின்றுள்ளார். 10, 11, 12 ஆகிய …

Read More »

கோவையில் நடிகர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் ..

கோவை: நீட் தேர்வை கடுமையாக எதிர்க்கும் நடிகர் சூர்யாவை கண்டித்து கோவையில் இந்து இளைஞர் முன்னணியினர் அவரது உருவ படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வை எதிர்க்கும் நடிகர் சூர்யாவை கண்டித்து கோவையில் இந்து இளைஞர் முன்னணியினர் போராட்டம் நீட் தேர்வுகளுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …

Read More »

அனிதாவின் சகோதரர் பட்டினிப் போராட்டம் ; அரியலூர்..

தமிழகத்தில் மாணவர்களின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி `நீட்’ தேர்வுக்கு எதிராக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அரியலூரில் இன்று பட்டினிப் போராட்டம் நடத்திவருகிறார். அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி, தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலகத்தில் அனிதாவின் சிலை ஒன்றையும் அவரது சகோதரர் மணிரத்தினம் அமைத்திருக்கிறார். இந்தநிலையில் கடந்த வாரம் நீட் …

Read More »

ஏன் நீட் வேணாம்னு சொல்லி படிக்கவிடாம பண்றீங்க; ஆர்த்தி…

ஏன் நீட் தேர்வு வேண்டாம்னு சொல்லி படிக்கிற பசங்களை பயமுறுத்தி சரியா படிக்கவிடாம பண்றீங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி. காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆர்த்தி தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவர் ட்விட்டரில் படுஆக்டிவாக இருப்பவர். சினிமா மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பார். இந்நிலையில் நீட் தேர்வால் மாணவி ஜோதி துர்கா …

Read More »

நீட் எதிர்ப்பு மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை..

சட்டப்பேரவையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் அணிந்திருந்தனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாஸ்க் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்துக்கு  வந்தனர்.  அதேசமயம், அவர்கள் சேர்ந்தாற்போல் இருந்தது சமூக இடைவெளி கேள்விக்குறியானது.         நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பொறிக்கப்பட்ட மாஸ்க்கை திமுக எம்.எல்.ஏ.க்கள் அணிந்திருந்தனர்.   Thanks to : news 18      

Read More »

நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி – கரூர் மாவட்டம் ..

கரூர்: கரூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், தேர்வு மையத்துக்குள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். நாடு முழுக்க கொரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வுகள் நடக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு இதனால் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு நடக்க உள்ளது. மொத்தம் 3 மணி நேரம் …

Read More »

நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி !! -ராணிப்பேட்டை மாவட்டம் ..

ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த் மாணவி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலைகள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு …

Read More »

நீட் தேர்வை ரத்துசெய்வது சட்டத்திற்கு எதிரானது – அண்ணாமலை..

நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொல்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அண்ணா நகர் கட்சி அலுவலகத்தை பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீட் தேர்வு அச்சத்தால் மரணமடைந்த மாணவர்களுக்கு பிஜேபி மற்றும் என்னுடைய சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நான் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக …

Read More »

கமல்ஹாசன் ;அரசுகள் மாற்று வழியைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்..

மதுரை மாணவி தற்கொலை தொடர்பாக மநீம தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் மாற்று வழியைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்றார். சில தினங்களுக்கு முன்னர் அரியலூரில் நீட் அச்சம் காரணமாக விக்னேஷ் என்ற மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், இன்று மதுரையில் ஒரு மாணவி அதே காரணத்துக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.     இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், “மாணவி …

Read More »

‘நீட்’ தேர்வு நாளை நடக்கிறது கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு..

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 842 மையங்களில் சுமார் 16 லட்சம் பேர் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கொரோனாவையொட்டி தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக …

Read More »
MyHoster