குடிநீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்ட வேண்டும். அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டுமே கட்டடம் கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அடிப்படை வசதிகள் இருந்தால் மட்டுமே இனி கட்டடம் கட்ட அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மனைப்பிரிவில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவிகித இடத்தை பொழுதுபோக்கிற்கும், 1 சதவிகித இடத்தை …
Read More »தமிழக அரசு வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு!
அம்மா சிமெண்ட் விலை உயர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட்டின் விலையை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சிமெண்ட் கழகம் சார்பில் குறைந்த விலையில் சிமெண்ட் விற்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் 100 சதுர அடியும், அதிகபட்சமாக 1500 சதுர அடி வரையும் வீடு கட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்டிட …
Read More »16-ஆம் தேதி பள்ளிகள் திறப்பை கைவிட வேண்டும் ..
நவம்பர் மாதத்திற்கான ஊரடங்கு தளர்வை அறிவித்த தமிழக அரசு, வரும் 16ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக வரும் 16-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ” தமிழ்நாட்டில் …
Read More »சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடைமுறை நிறுத்தி வைப்பு !!
சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது தமிழக அரசு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற …
Read More »வரதட்சணை கொடுமைக்கு இனி 10 வருஷம் ஜெயில்..!!!
வரதட்சணை கொடுமைக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (செப்.16) அறிவித்துள்ளார். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை முதல்வர் சட்டப்பேரவையில் இன்று பட்டியலிட்டு பேசினார். அப்போது பேரவை விதி எண் 110 -ன் கீழ் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: வரதட்சணை கொடுமை தொடர்பான …
Read More »அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் ..
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் என தமிழக அரசு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் தெரிவித்துள்ளது. கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என …
Read More »புதிய கல்விக் கொள்கை குறித்து குற்றச்சாட்டு…
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்திட கல்வியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து ஒரு மாதமாகியும் இதுவரை குழு அமைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் மூன்றாம் தேதி பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், மும்மொழிக் கொள்கையை அரசு ஏற்காது என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டார் . இதன் பிறகு புதிய கல்விக் …
Read More »அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை !!!
அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தினசரி வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர் மேலும் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள போதிலும் தமிழகத்தில் உள்ள பல அரசுப்பள்ளிகளுக்கு ஆசிரியர்கள்,தலைமை ஆசிரியர்கள் வருவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது அதனை முன்னிட்டு அரசுப் …
Read More »சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த இடம் தேடும் தமிழக அரசு !!
கொரோனா எதிரொலியாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை, தனிமனித இடைவெளியுடன் எங்கு வைத்து நடத்தலாம் என அரசு தீவிரமாக பரிசீலித்துவருகிறது. இது தொடர்பாக கலைவாணர் அரங்கில் சபாநாயகர் தனபால் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மார்ச் 31-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டது. பேரவை விதிகளின்படி, குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 24-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். இந்த …
Read More »தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை..
பல்லாயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர் குடும்பங்களை பட்டினிச்சாவிலிருந்து காக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தைச் சேர்ந்த கைத்தறித் தொழிலாளி சுப்ரமணியன் கடன் தொல்லை மற்றும் வறுமையால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் அவரும் அவருடைய மனைவியும் உயிரிழந்ததும் அவரது இரு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் …
Read More »
Rathiri Rounds Never Stop