தேனியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் வழக்கமான தாம்பூலத்திற்கு மாற்றாக சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி மணமக்கள் அசத்தியுள்ளனர்.
தேனி சேர்ந்த ராமலிங்கம் – மதுமிதா ஜோடி திருமணம், தனி மனித இடைவெளியை கடைபிடித்து மிக எளிமையான முறையில், தேனி பெத்தாச்சி விநாயகர் கோவிலில் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து மணமக்களை வாழ்த்த வீட்டுக்கு வந்த உறவினர்கள், நண்பர்களுக்கு மாஸ்க், சானிடைசர், ஐந்து கிலோ அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தாம்பூலத்தட்டில் வைத்து வழங்கபட்டன. மணமக்களின் இந்த சமூக அக்கறையை ஊர்மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Thanks To: news18
Rathiri Rounds Never Stop