Home / தமிழகம் / தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: ‛‛திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்ததுடன் இடி மின்னலுடன் கன முதல் மிக கன மழை பெய்யும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

latest tamil news

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும். மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் இருந்து தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக

latest tamil news

 

Advertisement

இன்று (நவ., 2ம் தேதி), நாளை 3ம் தேதி: (ஆரஞ்சு எச்சரிக்கை) திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கடலுார், வேலுார், ராணிப்பேட்டை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

latest tamil news

நவ.,4ம் தேதி: செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், காஞ்சிபுரம், சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

latest tamil news

 

 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:

மரக்காணம் (விழுப்புரம்) 20 செ.மீ., ஆட்சியர் அலுவலகம் கடலுார், 13 செ.மீ., நன்னிலம் (திருவாரூர்), கடலுார் தலா 12 செ.மீ., வேடச்சந்துார் (திண்டுக்கல்), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 10 செ.மீ., குறிஞ்சிப்பாடி (கடலுார்) திருத்துறைப்பூண்டி (திருவாரூர்) தலா 9 செ.மீ., ராமநாதபுரம், பரமக்குடி, நீடாமங்கலம் (திருவாரூர்), அரியலுார், கும்பகோணம், புதுச்சேரி, அவலாஞ்சி (நீலகிரி), பண்ருட்டி, வானமாதேவி (கடலுார்), நாகப்பட்டினம் தலா 7 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.

 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று (2ம் தேதி): குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

latest tamil news

நவ.,3, 4ம் தேதி: கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நவ.,5, 6ம் தேதி: மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *