Home / சினிமா / பாலா படத்தால் கடுமையான தலைவலி ..

பாலா படத்தால் கடுமையான தலைவலி ..

நடிகர் விஷால் கடும் தலைவலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலா இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான படம் ‘அவன் இவன்’. ஆர்யா, அம்பிகா, மதுஷாலினி, ஜனனி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்தில் விஷால் வால்டர் வணங்காமுடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கதைப்படி அவருக்கு மாறுகண் என்ற குறைபாடு இருக்கும்.

அதை நடிகர் விஷால் எந்தவித டூப்பும் இன்றி அவரே ரிஸ்க் எடுத்து நடித்ததால் கதாபாத்திரம் தத்ரூபமாக அமைந்திருக்கும். அதேவேளையில் திரையில் பார்த்து ரசித்த ரசிகர்களும் அந்தக் கேரக்டரை பாராட்டினார்கள்.

இந்நிலையில் அதுவே தற்போது விஷாலுக்கு தலைவலியாக மாறியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து புதிய படமொன்றில் நடித்து வரும் விஷால் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக கடுமையான தலைவலி ஏற்பட்டதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கடுமையான தலைவலி காரணமாக தன்னுடைய அறையிலேயே தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவன் இவன்’ திரைப்படத்தில் தன்னுடைய கண்களை மாற்றி நடித்திருந்ததில் இருந்தே அவருக்கு தொடர்ச்சியாக தலைவலி அவ்வப்போது வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தலைவலி அதிகமாகி படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறிதுகால ஓய்விற்குப் பின்னர் மீண்டும் விஷால் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Thanks to : news 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *