கொரோனா சிகிச்சையின்போது சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கொரோனா சிகிச்சையின்போது நுரையீரல் பாதிப்பை கட்டுப்படுத்த தேவைப்படும் நோயாளிகளுக்கு ஸ்டீராயிட்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் நோய் பாதிப்பின் காரணமாக உடலில் ஏற்படும் அழுத்தமும் சர்க்கரை அளவை கூட்டும். இதனால் சர்க்கரை இல்லாதவர்களுக்கு புதிதாக சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஏற்கெனவே சர்க்கரை இருப்பவர்களுக்கு மேலும் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
சர்க்கரை அளவு எவ்வளவு என ஊரடங்கு காலத்தில் பரிசோதனை செய்யாததாலும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இல்லாததாலும் லேசான பாதிப்புடன் இருந்த பல நோயாளிகளுக்கு தற்போது சர்க்கரை அளவு மிக அதிகமாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா சிகிச்சையின் போது அதிகரிக்கும் சர்க்கரை அளவு தற்காலிகமானதுதான் என்றும் ஏற்கெனவே சர்க்கரை நோய் இல்லை என்றால் 48 மணி நேரத்தில் குறைந்துவிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பலருக்கு கொரோனா பரிசோதனையின்போது தான் ஏற்கெனவே சர்க்கரை இருப்பது தெரிய வருகிறது என்றும், எனவே கொரோனா சிகிச்சைக்கு பிறகு சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop