இன்றையப் போட்டியில் பிராவோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
ஐ.பி.எல் 2020 தொடரின் டெல்லி அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சி.எஸ்.கே அணியில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.
ஐ.பி.எல் 13-வது சீசனின் 7-வது போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோத உள்ளன. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்த சி.எஸ்.கே அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 2 போட்டியிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் சி.எஸ்.கே-வின் ஓபனிங் சரியில்லாமல் இருக்கிறது. இதையடுத்து இன்றையப் போட்டியில் டூ-பிளசிஸ் ஒபனிங் விளையாட வாய்ப்பு உள்ளது.
பிராவோ உடல் நிலை சீராக உள்ளதாக சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபளமிங் கூறியுள்ளதால் இன்றையப் போட்டியில் பிராவோ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களில் லுங்கி நிகிடிக்கு பதிலாக அவர் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது. அம்பதி ராயுடு காயத்திலிருந்து மீண்டு வருவதால் இன்றையப் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ருத்துராஜ் அணியில் நீடிக்க வாய்ப்புள்ளது. இது அவருக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பு என்றே சொல்லலாம்.
சி.எஸ்.கே உத்தேச அணி : ஷேன் வாட்சன், டூ-பிளசிஸ், ருத்துராஜ், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷாம் கரன், டுவைன் பிராவோ, தீபக் சாஹர், சர்துல் தாகூர், பியூஷ் சாவ்லாPOINTS TABLE:

ஐ.பி.எல் 2020 தொடரின் புள்ளிப்பட்டியல்
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop