Home / செய்திகள் / திண்டுக்கல்லில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் !!!

திண்டுக்கல்லில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் !!!

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களை காக்க, குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிக்க சமூக நலத்துறையில் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளனர்.

திண்டுக்கல்லில் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது.கடந்த 4 மாதங்களில் வரதட்சணை, வன்முறை தாக்குதல், குழந்தைகள் உட்பட பிரியமானவர்களை துன்புறுத்தல் என 41 பெண்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

விசாரணையில் கிராமங்களை விட நகர்ப்புற குடும்பங்களில் அதிக வன்முறைகள் நடப்பது தெரிய வந்துள்ளது.கொரோனாஊரடங்கின்போது மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு இருந்ததால் புகார்கள் குறைவாக வந்தன.ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர்தற்போது தினமும் 2 புகார்கள் வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதிப்பு ஏற்படுத்தியவரிடம் மருத்துவம், பராமரிப்பு செலவு, ஜீவனாம்சம் போன்றவை கோர்ட் மூலம் பெற்றுத்தர உதவுவர். பாதிக்கப்படும் பெண்கள் 99425 11127 ல் பேசலாம்.

Thanks to : dinamalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *