ராணிப்பேட்டை: சோளிங்கரில், குண்டர் சட்டத்தில் நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மாங்குப்பத்தை சேர்ந்த அறிவழகன், 21, மற்றும் மங்கலத்தை சேர்ந்த பாஸ்கர், 21; குப்பக்கல்மேடு மணி, 21; காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ஜெயகுமார், 29, ஆகியோர் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை சோளிங்கர் போலீசார், கடந்த மாதம், 28ல் கைது செய்து, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது, தலா, 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு, எஸ்.பி., மயில்வாகனன் பரிந்துரைத்தார். இதன்படி அவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான நகலை சிறையிலுள்ள அவர்களிடம், போலீசார் நேற்று வழங்கினர்.
Thanks to : dinamalar
Rathiri Rounds Never Stop