தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 8,685 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5488 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5525 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6 ஆயிரத்தை நெருங்கியே வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்தப் போதிலும் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் தமிழகத்தில் 5488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,30,908 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவிலிருந்து 5525 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக கொரோனாவிலிருந்து 4,75,717 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரேனா உயிரிழப்பு இன்று 67 ஆக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை 8,685 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 989 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Thanks to : news 18
Rathiri Rounds Never Stop