Home / கரூர் / ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ; கரூர் மாவட்டம் ..

ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் ; கரூர் மாவட்டம் ..

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்:
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிட்டி பாபு முன்னிலை வகித்தார். சாரதி, லிங்கேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் நடைபெற்ற ரேடியேட்டர் ஊழலை மறைக்க 6 தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு பணிநீக்கம் மற்றும் பணியிட மாறுதல் கடிதம் அனுப்பியதை கண்டித்தும், வெள்ளியணையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை முடக்கி, பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தனியார் நிர்வாகத்தின் சட்ட விரோத செயலை கண்டித்தும், சட்டபடியான விசாரணை மேற்கொள்ளாமல் பலதொழிலாளர்களை சென்னைக்கு பணியிடமாறுதல் செய்வதை கைவிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Thanks to :  malaimalar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *