Home / செய்திகள் / கலக்கப்போவது முதல்வர்!!கலங்கப்போகுது கொரோனா!!

கலக்கப்போவது முதல்வர்!!கலங்கப்போகுது கொரோனா!!

சந்தேகமே வேண்டாம். முதல்வர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார். இது வேத சத்தியம்” என கட்டுரை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ்.
”கலக்கப்போவது முதல்வரா? கதிகலங்கிப்போவது கொரோனாவா? என்கிற சந்தேகம் எழலாம். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். முதல்வர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார். இது வேத சத்தியம்” என கட்டுரை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ்.
”கொரோனாவுக்கு ஒரே மருந்து விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு என்பதுதான். ஆனால் இதற்கு மற்றொரு மருந்து, தமிழக முதல்வரின் புன்னகை, தெளிவு, விடாமுயற்சி, தைரியம், மாவட்ட ஆட்சியர்கள், வல்லுநர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோரை உற்சாகப்படுத்தும் அவரது திறமையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக நேற்று ஒருநாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரையில், 78,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,025 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,939 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks to: News 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *