Breaking News
Home / தென் மாவட்டங்கள் / தூத்துக்குடி (page 5)

தூத்துக்குடி

தூத்துக்குடி

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

கடைசி நோயாளியும் குணமடைந்தார்- கொரோனா இல்லாத மாவட்டம் ஆனது தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 25 பேர் குணமடைந்தனர். ஒரு பெண் உயிரிழந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி பெண் குணமடைந்ததையடுத்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மருத்துவர்கள் வழியனுப்பி வைத்தனர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.

Read More »

நாகர்கோவிலில் கொரோனா வார்டில் பெண்கள் உள்பட 3 பேர் பலி

நாகர்கோவில்: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை மத்திய அரசு வகை படுத்தி உள்ளது. இதில் ஹாட்ஸ்பாட் மாவட்டமாக குமரி மாவட்டம் இடம் பெற்றுள்ளது. இங்கு 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மேலும் பலரின் ரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாகர்கோவிலில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று காலை …

Read More »

தூத்துக்குடியில் ஏழைகள், சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு – மாநகராட்சி ஆணையாளர் தகவல்

தூத்துக்குடி, தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதனால் வேலையின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழை கூலித்தொழிலாளர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள், யாசகம் பெறுபவர்கள், நரிக்குறவர்கள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இருக்கின்ற இடத்திலேயே அவர்களை கண்டறிந்து மாநகராட்சி பணியாளர்கள் மூலம் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகர பகுதிகளில் உணவின்றி தவிக்கும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் செல்போனில் …

Read More »

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 12-வது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகு மீனவர்கள் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி, காலை 5 மணிக்கு கடலுக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரை திரும்புகிறார்கள். இவ்வாறு சென்று வரும்போது குறைவாக மீன்கள் கிடைப்பதால் பெரும் ந‌‌ஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே விசைப்படகு மீனவர்களுக்கு 48 மணி நேரம் தங்குகடல் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும். அல்லது ஜூன் 15-ந்தேதி …

Read More »

ஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான இரும்பு கடையில் செம்மர கட்டைகளை பதுக்கி வைத்து இருப்பதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் முத்துவின் இரும்பு …

Read More »

தூத்துக்குடி – வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல் …

Read More »
MyHoster