Breaking News
Home / திருப்பூர் (page 2)

திருப்பூர்

திருப்பூர்

போதிய கூட்டம் இல்லை: பிரச்சாரத்தை ரத்து செய்த கமல்ஹாசன்!

போதிய கூட்டம் இல்லாத காரணத்தால் தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்து விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!! மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் நேற்று திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த கமல்ஹாசன், மடத்துக்குளம் என்ற பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் அங்கு அவர் …

Read More »

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டி?

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது..!! அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. …

Read More »

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு

பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார்..!! திருப்பூர் மாவட்டம் இரண்டாவது நாளான இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் பேசியபோது, நேற்று திருப்பூர் மாவட்டம் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள், அமைச்சர்கள், மற்றும் சட்டப்பேரவை துணை தலைவர்களும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தனர் …

Read More »

தமிழகம் வெற்றிநடை போடவில்லை- கனிமொழி

முதல்வர் தான் நடக்கிறார் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்..!! திருப்பூர்: ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று திருப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- * வெற்றி நடைபோடும் தமிழகம் என கூறிவிட்டு முதல்வர் தான் நடக்கிறார், தமிழகம் வெற்றி நடைபோடவில்லை. * ரேஷன் கடைகள் …

Read More »

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வருவேன்- முதலமைச்சர் EPS பிரசாரம்

தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வருவேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்..!! திருப்பூர்:-  திருப்பூர் அவிநாசி பேருந்து நிலைய பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது: * அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி, குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். * மீண்டும் முதல்வராகி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை தொடங்கி வைப்பேன். * திமுக வாரிசு அரசியல் கட்சி. * …

Read More »

பரபரப்பு! முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக போனில் மிரட்டல் நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்..!! தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் என்பது சமீப காலமாக அதிகமாகவே இருக்கிறது. நடிகர்கள், நடிகைகள் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் இல்லத்திற்கே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் சென்னை இல்லத்திற்கும், சேலத்தில் உள்ள இல்லத்திற்கும் 100 என்ற எண்ணில் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் …

Read More »

குடிநீர் குழாயில் உயிருடன் வந்த பாம்பு: அசுத்தமான நீரால் நோய் பரவும் அபாயம்

குடிநீர் குழாயில் உயிருடன் வந்த பாம்பு: அசுத்தமான நீரால் நோய் பரவும் அபாயம்..! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது மரவபாளையம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மேல்நிலை தொட்டியில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் பொது குடிநீர் குழாயில்பெண்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீருடன் …

Read More »

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்..! திருப்பூர்:-  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையத்தில் பா.ஜனதா சார்பில் ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநில பா.ஜனதா பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தாமரை மலருமா? என்று …

Read More »

ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது !!

திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், திருப்பூரைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவரின் செல்போனில் நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஏற்று டிரைவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே இருப்பதாகவும், தனது கையை அறுத்து கொண்டதாகவும், உடனடியாக தன்னை வந்து காப்பாற்றும்படியும் கூறினார். மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு …

Read More »

திருப்பூர்: வேளாண் சட்டங்களை எதிர்த்து நூதன முறையில் போராட்டம் !!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து கருஞ்சட்டையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் கறுப்புக் கொடி ஏந்தி கருஞ்சட்டை  ஆர்ப்பாட்டத்தில் …

Read More »
MyHoster