Breaking News
Home / ஈரோடு (page 2)

ஈரோடு

ஈரோடு

ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி – 3 பேர் கைது

ஈரோடு, ஈரோடு பெருந்துறைரோட்டில் பிரபல தனியார் ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரியில் நிர்வாக அதிகாரியாக ஈரோடு சென்னிமலைரோடு காந்திநகரை சேர்ந்த சதீஸ்குமார் (வயது 31) உள்ளார். அவரது செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் பேசியபோது எதிர்முனையில் பேசியவர் தன்னை ஓய்வுபெற்ற நீதிபதி என்றும், கொரோனா நிவாரண உதவி வழங்குவதற்காக நிதி திரட்டுவதாகவும் தெரிவித்தார். அதற்கு சதீஸ்குமார், …

Read More »

நடமாடும் விற்பனை நிலையங்களால் ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் கூட்டம் குறைந்தது

ஈரோடு, ஊரடங்கால் ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு தொடக்கத்தில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இதனால் பொதுமக்களை மேட்டூர்ரோட்டிலேயே வரிசையாக நிற்க வைத்து, மார்க்கெட்டிற்கு அனுமதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகு கூட்ட நெரிசல் குறைந்தது. இந்தநிலையில் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், நீண்ட தூரம் பொதுமக்கள் …

Read More »

அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி

அந்தியூர், கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் அந்தியூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னதம்பிபாளையம், மைக்கேல்பாளையம், பர்கூர், கெட்டிசமுத்திரம், பச்சாம்பாளையம், கீழ்வாணி, மூங்கில்பட்டி உள்பட 14 ஊராட்சிகளுக்கு தேவையான கிருமி நாசினி, பணியாளர்களுக்கு தேவையான கையுறைகள், கைகழுவும் திரவம் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய ஆணையாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். இந்த பொருட்களை அந்தந்த …

Read More »

பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயற்சி; 2 பேர் கைது

அந்தியூர், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமம் ஒரத்திபாளையம் பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு தேக்கு மரம் சுமார் 6 அடி நீளத்தில் 2 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்தது. இதனால் வனத்துறையினர் ஒரு மரத்துக்கு பின்புறம் மறைந்து யாராவது தேக்கு மர துண்டுகளை எடுக்க வருகிறார்களா? என்று கண்காணித்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து 2 பேர் அங்கு நைசாக …

Read More »

ஈரோட்டில் தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமிநாசினி தெளிப்பு

ஈரோடு, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் பெரிய வாகனங்கள் மூலமாக முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக ஈரோடு சத்திரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேபோல் போலீஸ் வாகனங்களும் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்படுகிறது.

Read More »

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை தீவிரம்

ஈரோடு, கவுந்தப்பாடி பழனிச்சாமி வீதியில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கவுந்தப்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கவுந்தப்பாடி சத்தி சாலை, சரவணாநகர், தம்பி நகர், நேருநகர், காந்திபுரம், 10 மற்றும் 11-வது வார்டு பகுதிகளில் வீடு, …

Read More »

ஈரோடு பஸ் நிலையம் தற்காலிக மார்க்கெட்டில் குவிந்த மக்கள்; நெருக்கியடித்துக்கொண்டு வந்ததால் பரபரப்பு

ஈரோடு, ஈரோடு நேதாஜி காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட் தற்காலிகமாக ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. நேதாஜி மார்க்கெட் பகுதி நெரிசலாகவும், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க போதிய வசதி இல்லாமல் இருப்பதாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், ஆர்.டி.ஓ. முருகேசன் என்று அனைத்து அதிகாரிகளும் உரிய ஆலோசனை செய்து இந்த முடிவினை எடுத்தனர். பொதுமக்கள் காய்கறி …

Read More »

வாடும் மல்லிகைப்பூ- நாளொன்றுக்கு ரூ.1 கோடி இழப்பு

ஈரோடு: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நேற்றுவரை 23 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.  ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த நபர் (வயது 40) ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா வைரஸ் அச்சத்தினால் …

Read More »

தமிழகத்தில் ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை ; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

கடத்தூர், கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு, பள்ளிவாசலில் உள்ள உலமாக்களுக்கு மாத ஓய்வூதிய தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. ஹஜ் பயணிகளுக்காக ரூ.15 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு என்றைக்கும் முஸ்லிம்களை பாதுகாக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. ஆகையால், அவர்கள் அச்சப்பட தேவையில்லை. ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ளாட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி …

Read More »

ஈரோட்டில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் ஈரோடு வழங்கல் அலுவலரின் இருந்த பரிமளா ஈரோடு தாசில்தாராகவும், ஈரோடு தாசில்தாராக இருந்த ரவிச்சந்திரன் மொடக்குறிச்சி தாசில்தாராகவும், பெருந்துறை தாசில்தாராக இருந்த துரைசாமி முத்திரைத்தாள் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராக இருந்த மாசிலாமணி மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளரகவும், மொடக்குறிச்சி தாசில்தாராக இருந்த கவுசல்யா ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார்கவும், பெருந்துறை தாசில்தாராக முத்துகிருஷ்ணன், ஈரோடு ஆர்.டி.ஓ நேர்முக …

Read More »
MyHoster