Breaking News
Home / கரூர் (page 7)

கரூர்

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா !!

மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு உட்பட்ட பாலராஜபுரம் கணேசநகர் பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் புகார் பெட்டியில் போட்ட மனுவில், எங்கள் பகுதியில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்க அனுமதி கிடைக்கப்பெற்றது. …

Read More »

லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து !! – கரூர் மாவட்டம் ..

குளித்தலை அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குளித்தலை, சேலம் அருகே உள்ள காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 39). லாரி டிரைவரான இவர், கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் லாரியில் இருந்து ஜல்லிக் கற்களை இறக்கிவிட்டு மீண்டும் மயிலாடுதுறையிலிருந்து குளித்தலை வழியாக கரூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சி – கரூர் …

Read More »

பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு !! – கரூர் மாவட்டம் ..

கரூர் பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மனு அளித்தனர். கரூர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் …

Read More »

குளித்தலை அருகே வாய்க்கால் நடைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்படுமா?

குளித்தலை அருகே வாய்க் கால் நடைபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக் கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். குளித்தலை, கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருங்கலாப்பள்ளி – கணப்பிள்ளையூர் செல்லும் வாய்க்கால்கரை சாலையில், கருங்கலாப்பள்ளி பகுதியில் இருந்து ரெத்தினம்பிள்ளைபுதூர் செல்வதற்கு, இப்பகுதி வழியாக செல்லும் கட்டளை மேடு, புதிய கட்டளைமேடு ஆகிய இருவாய்க்கால்களின் மேல் இரண்டு நடைபாலங்கள் உள்ளன. இந்த நடைபாலம் வழியாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியில் உள்ள …

Read More »

கரூர் அருகே சாலையில் சிதறி கிடந்த பல்கலைக்கழக தேர்வு ..

கரூர் அருகே சாலையில் சிதறி கிடந்த பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர், கரூர் ஆர்.புதுக்கோட்டை அருகே உள்ள கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வாகனம் ஒன்று கரூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இதனால் அந்த வாகனத்தில் இருந்து திடீரென பேப்பர்கள் சாலையில் பறந்து விழுந்தன. ஆனால் அந்த வாகனத்தில் வந்தவர்கள் அதை கண்டு கொள்ளாமல் அப்படியே சென்று விட்டனர். இதைக்கண்ட …

Read More »

குறைவான ஆம்னி பஸ்களே இயக்கம் !! – கரூர் மாவட்டம் ..

கரூரில் இருந்து நேற்று குறைவான ஆம்னி பஸ்களே இயக்கப்பட்டன. கரூர், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில்கள் மற்றும் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாவட்டத்திற்குள்ளும், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவில் இருந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் …

Read More »

ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் அகற்றம் !! – கரூர் மாவட்டம்..

கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். கரூர், கரூர்-கோவை ரோட்டில் உள்ள ஆண்டாங்கோவில் ஜீவாநகர் ரோட்டுகடை பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் ஒருசிலர் தாங்களாகவே முன்வந்து கடையை காலி செய்தனர். ஒரு சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில் நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டிருந்த …

Read More »

மதுவில் விஷம் கலந்து குடித்து – பாத்திர வியாபாரி தற்கொலை !! – கரூர் மாவட்டம் ..

கரூரில் தங்கை கணவர் இறந்த சோகத்தில் பாத்திர வியாபாரி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர், கரூர் தெற்கு காந்திகிராமம் டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டியன் (வயது 48). பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், முத்துபாண்டியனின் தங்கை கணவரான பொன்னுசாமி கடந்த 11-ந்தேதி உடல்நல குறைவால் இறந்து விட்டார்.   இதனால் பொன்னுசாமியின் மறைவை …

Read More »

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை எதிர்த்து தனித்து நின்று போட்டியிடுவதே வெற்றி தான் ; தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம் ..

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக இன்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அப்துல்கலாம் அய்யாவின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கூறியதாவது, வரும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்தனர்.     மேலும் அனைத்து தொகுதிகளிலும் நல்ல நோக்கங்களுடனும் மக்கள் …

Read More »

நாசா ராக்கெட்டில் பறக்கவிருக்கும் கரூர் மாணவர்கள் !!

அடுத்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அனுப்பவிருக்கும் எஸ்.ஆர்-7 ராக்கெட் மூலம், இம்மாணவர்கள் வடிவமைத்துள்ள இந்தச் சிறிய ரக சாட்டிலைட்டும் விண்வெளிக்குப் பறக்க இருக்கிறது. கரூர் மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து வடிவமைத்துள்ள சிறிய வடிவிலான சாட்டிலைட் ஒன்று, அடுத்த ஆண்டு நாசா விண்வெளிக்கு அனுப்பவிருக்கும் ராக்கெட்டில் சேர்ந்து பயணிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் …

Read More »
MyHoster