Breaking News
Home / கரூர் (page 6)

கரூர்

கரூர்

கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்!!

கரூர் இரட்டை வாய்க்காலில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூர், கரூர் செட்டிப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அணையில் இருந்து பிரிந்து பல்வேறு பகுதிகளுக்கு விவசாயத்திற்காக கிளை வாய்க்கால்கள் செல்கின்றன. அந்த வாய்க்காலில் விஸ்வநாதபுரி வாய்க்காலும் ஒன்று. இந்த விஸ்வநாதபுரி வாய்க்காலில் இருந்து இரட்டை வாய்க்கால் பிரிந்து சின்னஆண்டான்கோவில், லைட்ஹவுஸ், மார்க்கெட், ரத்தினம் சாலை உள்ளிட்ட பகுதிகளை கடந்து மீண்டும் அமராவதி ஆற்றில் கலக்கிறது. …

Read More »

கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் தூக்குப்போட்டு தற்கொலை !!

கரூர் பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் பொறியியல் பட்டதாரி-சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். கரூர், கரூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 29). பொறியியல் பட்டதாரி. இவர் வான்மதி (24) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் கிருஷ்ணகுமாருக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6 …

Read More »

டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு !!

டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் கரூர், கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகரில் டெக்ஸ்டைல் நிறுவனம் ஒன்று உள்ளது. சசிகுமார் என்பவர் இந்த நிறுவனத்தின் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் வழக்கமான பணிகளை முடித்து விட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சசிகுமார் வீட்டுக்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை அலுவலகத்தை திறக்க வந்தபோது முன் பக்க கதவு …

Read More »

பழுதடைந்து கிடக்கும் குடிநீர் தொட்டி அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு !!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் பழுதடைந்து கிடக்கும் குடிநீர்தொட்டி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். கரூர், கரூர் நகராட்கிக்கு உட்பட்ட தெற்கு காந்திகிராமம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 2-வது கிராஸ் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து நீர் எடுத்து அருகில் குடிநீர் தொட்டியில் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. …

Read More »

அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர், மனைவியுடன் தர்ணா..

பணி நீக்கம் செய்ததை கண்டித்து குளித்தலை அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர், மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குளித்தலை, கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழதண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 39). அவர் தனது மனைவி நந்தினி(30) உடன் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் …

Read More »

மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் தர்ணா போராட்டம்..

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று கரூர் கோவை ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கூட்டுக்குழு சங்க தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., டி.எம்.டி.எம்., என்ஜினீயர் சங்கம், ஏ.இ.எஸ்.யூ., ஐக்கிய சங்கம், ஏ.சி.எஸ்.யூ. …

Read More »

கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர் ..

கரூர் மாவட்ட புதிய கலெக்டராக மலர்விழி பொறுப்பேற்றுக் கொண்டார். கரூர்: கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த அன்பழகன் மதுரை மாவட்ட கலெக்டராகவும், தர்மபுரி மாவட்ட கலெக்டராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட கலெக்டராகவும் தமிழக அரசு நியமித்தது. இதனையடுத்து கரூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக மலர்விழி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். மலர்விழி 2001-ம் ஆண்டில் குரூப்-1 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்தார். 2007-ம் ஆண்டு …

Read More »

காணொலிக்காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார் ..

கரூர் வெங்கமேட்டில் தொடர் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். கரூர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 25 தொடர் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களை திறந்து வைத்தார். கரூர் நகரத்தில் வெங்கமேடு சாலையில் அமைந்துள்ள ஆசியன் …

Read More »

கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு !! -கரூர் மாவட்டம் …

கரூரில் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் கார் டிரைவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கரூர், கரூர் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 27). கார் டிரைவரான இவர், அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரது மகளை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, இந்த காதல் விவகாரம் …

Read More »

தீபாவளியையொட்டி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் !!

தீபாவளியையொட்டி, அரசு விதிமுறைகளை கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. குளித்தலை, தீபாவளியையொட்டி, குளித்தலை பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குளித்தலை அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்றது. போலீஸ் துணை சூப்பிரண்டு சசீதர், நகராட்சி ஆணையர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு குளித்தலை உதவி கலெக்டர் ஷேக்அப்துல் ரகுமான் தலைமை தாங்கி பேசியதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைகளில் …

Read More »
MyHoster