பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 21). தொழிலாளியான இவர் வீட்டின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தபோது காயம் ஏற்பட்டதாக கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவருடைய தோள்பட்டையில் நாட்டுத்துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சாமிதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு …
Read More »தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 215 போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரில் 215 பேருக்கு கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 7 …
Read More »இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதல்: டிரைவர் பலி
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சகாதேவன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வமணி (வயது 24). இவர் டிரைவர் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சகாதேவன் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி பைபாஸ் சாலை ராமக்காள் ஏரி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அரசு பஸ் செல்வமணி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. …
Read More »பொம்மிடி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
பாப்பிரெட்டிப்பட்டி: தருமபுரி மாவட்டம், பொம்மிடியை அடுத்துள்ள பி.துறிஞ்சிப்பட்டி 4 ரோட்டில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பெரியசாமி, ராஜேந்திரன், மேற்பார்வையாளராக சுப்பிரமணி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். வழக்கம் போல் நேற்றிரவு மதுக்கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்றுகாலை மதுக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பொம்மிடி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் …
Read More »பள்ளி மாணவர்களை அடித்த தலைமை ஆசிரியர் சிறைபிடிப்பு
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியில் கல்வித்தரம் குறைந்ததால் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது. மேலும் ஆசிரியர்களின் கோஷ்டி பூசலால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டதாக, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புகார் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வேலை நேரத்தில் பள்ளியில் …
Read More »தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 13 நாட்களே ஆன அந்த குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் குழந்தையை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். இதையடுத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் குழந்தை திடீரென இறந்தது. இதேபோல் …
Read More »இண்டூர் அருகே மதுவிற்ற பெண்கள்; 3 பேர் கைது
இண்டூர்: தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக பாறைக் கொட்டாய் பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது48), ராஜா கொல்லஅள்ளியை சேர்ந்த மகேஸ்வரி (50), அண்ணாத்துரை (55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
Read More »மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தருமபுரி மின்திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லெனின் மகேந்திரன் தலைமை வகித்தார். பீகார் மாநில மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதும், பாட்னாவில் போராடிய மின்வாரிய தொழிலாளர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும், மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. தனியார் மயமாக்கும் அறிவிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Read More »
Rathiri Rounds Never Stop