Breaking News
Home / வட மாவட்டங்கள் / திருவள்ளூர் (page 20)

திருவள்ளூர்

திருவள்ளூர்

கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் அருகே தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேர் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் அங்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தியபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியானது திருவள்ளூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

என்.சி.சி. மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக விளையாட்டு மைதானத்தில், பள்ளிக்கல்வி மற்றும் காவல்துறை இணைந்து, மாணவர் காவல் படையை (என்.சி.சி.) சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:– திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 210 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் மாணவர் காவல் படை திட்டம் செயல்பட்டு வருகிறது. ஏ.கே.எஸ். கல்யாண மண்டபத்தில் …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதி

திருவள்ளூர், ஜன. 28– திருவள்ளூர் மாவட்டத்தில் பாம்பு கடித்தும், சாலை விபத்திலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முதலமைச்சரின் நிவாரண நிதியை வழங்கினார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கத்தில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார். மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து …

Read More »

திருவள்ளூரில் 31–ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர், ஜன. 28– திருவள்ளூரில் 31–ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் …

Read More »
MyHoster