ஸ்ரீபெரும்புதூர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திரஜித்(வயது 43). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பக்கத்தில் தங்கி, அதே பகுதியில் பீடா கடை நடத்தி வந்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இந்திரஜித், வருமானம் இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியின்றி தவித்தார். இதனால் அவர், வலி நிவாரணி மாத்திரை, சளி, காய்ச்சல் மாத்திரை மற்றும் இருமல் மாத்திரைகளை பொடியாக்கி அவற்றை சிறிய கவரில் போட்டு, …
Read More »காஞ்சீபுரத்தில் பதப்படுத்தப்பட்ட 10 டன் கோழி இறைச்சிகள் பறிமுதல் – குடோனுக்கு அதிகாரிகள் ‘சீல்’
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் மெகபூப்பாஷா(வயது 43). இவர், அதே தெருவில் உள்ள முத்தீஸ்வரர் தோட்டத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பெரிய குடோன் வைத்து உள்ளார். கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை வாங்கி வந்து, இந்த குடோனில் பதப்படுத்தி காஞ்சீபுரத்தில் உள்ள இறைச்சி கடை மற்றும் ஓட்டல்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைப்பார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு …
Read More »காஞ்சீபுரம் அருகே, செல்போன் வெடித்து வாலிபர் காயம்
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே கோவிந்தவாடி கிராமம் புதிய காலனியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது 21). நேற்று காஞ்சீபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அவசர அவசரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள நெல் மூட்டைகளை அருள்மொழி உள்பட விவசாயிகள், தார் பாய் போட்டு மூடி கொண்டு இருந்தனர். அப்போது இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென அருள்மொழி …
Read More »படப்பை அருகே, வீடு, வீடாக முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் பணி – மாவட்ட கலெக்டர் ஆய்வு
படப்பை, காஞ்சீபுரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 210 முதியோர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்திடும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் அவர் களுக்குரிய முதியோர் ஓய்வூதிய தொகையை வருவாய்த்துறை மற்றும் கிராமங்களில் உள்ள வங்கி உதவியாளர்கள் மூலம் …
Read More »காஞ்சீபுரத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி
காஞ்சீபுரம், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 16 பேர், டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே உள்ள ஒரு பள்ளிவாசலில் தங்கி இருந்தனர். இதையடுத்து 16 பேரும் பள்ளி வாசலிலேயே தனிமைப்படுத்துப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு …
Read More »மது விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது
கல்பாக்கம், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட போலீசார் திருக்கழுக்குன்றம் சரகத்துக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது ஈசூர் கிராமம் அடுத்த வல்லிபுரம் பாலாற்று பகுதியில் மதுபாட்டில்கள் அனுமதியின்றி விற்பனைக்காக வைத்திருந்த லட்சுமி(56) என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அவர் மீது …
Read More »டயர் வெடித்ததால் விபத்து: சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து சென்னை போலீஸ்காரர் பலி – போலீஸ் ஏட்டு படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர், சென்னை ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 24). இவர், சென்னை ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். செய்யாறு போலீஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு ஏட்டுவாக வேலை செய்பவர் சன்னிலாயத் (45). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை செய்யாறில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். காரை சன்னிலாயத் ஓட்டினார். அவருக்கு அருகில் துரைராஜ் அமர்ந்து பயணம் செய்தார். சென்னை-பெங்களூரு தேசிய …
Read More »ஊரடங்கின்போது விபத்து; சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு – டிரைவர் படுகாயம்
ஸ்ரீபெரும்புதூர், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 36). இவர், நேற்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் சென்னையில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர் குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேவலூர் குப்பம் சாலைக்கு செல்வதற்காக லாரியை அதன் டிரைவர் சாலையின் வலது புறமாக திருப்பினார். அப்போது சென்னை …
Read More »செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
வண்டலூர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்கள் தவிர அனாவசியமாக சுற்றித்திரிபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து, நூதன தண்டனையும் வழங்கி வருகின்றனர். ஆனாலும் அதையும் மீறி சிலர் தேவையின்றி சுற்றித்திரிகின்றனர். கூடுவாஞ்சேரியில் நேற்று ஒரே நாளில் சாலையில் சுற்றித்திரிந்த 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் இருந்து 30 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு …
Read More »ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்
மாமல்லபுரம், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரம், ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாக காட்சி அளித்து வருகிறது. ஊரடங்கின் 6-வது நாளான …
Read More »
Rathiri Rounds Never Stop