Home / Tag Archives: # tn bus

Tag Archives: # tn bus

பேருந்து பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு வார இறுதி நாட்களில் 20 சதவீதம் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக நிர்வாகம் (SETC) தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் இறுதி வாரத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு தமிழகத்தில் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டங்களுக்கு இடையே செப்டம்பர் 7 ஆம் …

Read More »

அரசுப் பேருந்துகளில் ”மக்களால் நான், மக்களுக்காகவே நான்” வாசகம் ..

அரசுப் பேருந்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய ”மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. புதிதாக வாங்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாரக மந்திரமாக இருந்த “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் அச்சிடப்பட்டுள்ள இந்த வாசகத்தின் கீழ் புரட்சித் தலைவி அம்மா எனக் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அதேபோல், பேருந்தின் முகப்புப் பகுதியில் வழக்கம் போல் திருக்குறள் மற்றும் பேருந்தின் மற்ற பகுதிகளில் விதிமுறைகள் இருக்கை வித்தியாசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. …

Read More »

செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து…

பொது போக்குவரத்தை உடனடியாக இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்குவதால் பல பேருந்துகளை இயக்க முடியவில்லை என குற்றம் சாட்டினர். பணி நிமித்தம் அருகிலுள்ள நகரங்களுக்கு செல்லவேண்டும் என்றாலும் வேறு மாவட்ட எல்லையில் வருவதால் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவியது. இது தொடர்பாக அதிருப்தி நிலவிவந்த நிலையில் செப்டம்பர் …

Read More »

நாளை முதல் பேருந்து சேவை ;கிருமிநாசினி தெளிக்கும் பணி …

சென்னையில் நாளை முதல் பேருந்து சேவை துவங்க உள்ள நிலையில் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது இதற்கான அறிவிப்பினை அரசு நேற்று வெளியிட்டது. இதனையடுத்து இன்று சென்னை மாநகர போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது, பேருந்துகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது இதற்கான …

Read More »

ஆகஸ்ட் 1 முதல் போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு?

தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக …

Read More »