Home / Tag Archives: #Private Hospital

Tag Archives: #Private Hospital

கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள்!!-

திருச்சியில் இயங்கும் தனியார் பரிசோதனை மையத்தில் கொரோனா பரிசோதனையில் தவறான முடிவுகள் வழங்குவதாகக் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனைகளுடன் தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகளவு பரிசோதனை மையங்கள் இயங்கிவரும் நிலையில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மையத்தில் தவறான பரிசோதனை முடிவுகள் வழங்கப்பட்டுள்ளன. திருச்சி மாநகரின் புத்தூர் நான்கு ரோடு பகுதியிலுள்ள தனியார் பரிசோதனை மையத்துக்கு (டாக்டர் டயக்னோஸ்டிக் சென்டர்) கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.   …

Read More »

சுகாதாரத்துறை விளக்கம் : சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு..

சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக வெளியான தகவல் தவறு என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை விவரங்களை அறிந்து கொள்ள விரைவில் இணையதளம் துவங்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. படுக்கைகளை கூடுதலாக ஏற்படுத்தி சிகிச்சை அளிக்க 70 தனியார் மருத்துவமனைகள் முன்வந்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் இருப்பதாகவும், இதற்கான சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. …

Read More »