சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு வார இறுதி நாட்களில் 20 சதவீதம் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக நிர்வாகம் (SETC) தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மார்ச் இறுதி வாரத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு தமிழகத்தில் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாவட்டங்களுக்கு இடையே செப்டம்பர் 7 ஆம் …
Read More »Tag Archives: #bus
தற்போது உள்ள நிலையில் பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை…
பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 7-ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து …
Read More »செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து…
பொது போக்குவரத்தை உடனடியாக இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில் நேற்று முதல் தமிழ்நாட்டில் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பு பெற்றாலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க முன்வரவில்லை. மாவட்டங்களுக்குள் மட்டும் இயக்குவதால் பல பேருந்துகளை இயக்க முடியவில்லை என குற்றம் சாட்டினர். பணி நிமித்தம் அருகிலுள்ள நகரங்களுக்கு செல்லவேண்டும் என்றாலும் வேறு மாவட்ட எல்லையில் வருவதால் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவியது. இது தொடர்பாக அதிருப்தி நிலவிவந்த நிலையில் செப்டம்பர் …
Read More »நாளை முதல் பேருந்து சேவை ;கிருமிநாசினி தெளிக்கும் பணி …
சென்னையில் நாளை முதல் பேருந்து சேவை துவங்க உள்ள நிலையில் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது இதற்கான அறிவிப்பினை அரசு நேற்று வெளியிட்டது. இதனையடுத்து இன்று சென்னை மாநகர போக்குவரத்து பணிமனைகளில் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிப்பது, பேருந்துகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் பணிமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஐந்து மாத காலத்திற்கு பிறகு சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது இதற்கான …
Read More »ஆகஸ்ட் 1 முதல் போக்குவரத்து மீண்டும் தொடங்க வாய்ப்பு?
தமிழகத்தில் சென்னை தவிர பிற பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: மார்ச் 25-ந்தேதிக்குப்பின் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூலை 31-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அதன்பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்திற்கு தளர்வு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக …
Read More »பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயார்!!
தமிழக அரசு அறிவித்தவுடன் பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன. கரோனா ஊரடங்கு வரும் 31-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் 20 ஆயிரம் அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகளின் சேவையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்துவரும் 29-ம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊடரங்கு வரும் 31-ம் தேதி …
Read More »முகக்கவசத்துடன் மட்டும் பேருந்தில் பயணம் அனுமதி..!
மதுரையில் பேருந்துகளின் இருக்கைகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடக்கம். முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதி. நாளை முதல் மதுரையில் 400 பேருந்துகளை இயக்கவுள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சானிடைசர் வழங்க ஏற்பாடு. காய்ச்சல், சளி மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு பேருந்தில் பயணிக்க அனுமதி கிடையாது. Share on: WhatsApp
Read More »தமிழகத்தில் பேருந்து சேவை எப்போது தொடங்கும்..!
நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி, தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று நான்காம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி, தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் இங்கு ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று முறைப்படி …
Read More »
Rathiri Rounds Never Stop