Breaking News
Home / சினிமா / நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்…

நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்…

_நடிகர் விவேக் காலமானார்_

*_நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்._*

_1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் விவேக். கலைவாணர் என்.எஸ்.கே போல அவர் நடித்த படங்களில் நகைச்சுவை காட்சிகளில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துக் கூறியவர். நகைச்சுவை மூலம் லஞ்சம், ஊழல், சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை, சமூக சீரழிவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் அவருக்கு ‘சின்ன கலைவாணர்’ என்ற அன்பு பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். அதேபோல் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவரது கருத்துக்களை மாணவர்களிடையே கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவர். மேடைகள் தோறும் கலாமின் கருத்துக்களை பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். சுற்றுச்சூழல் தொடர்பாகவும் அமைப்புகளை வைத்து மரம் நடுதல் போன்றவற்றை ஊக்குவித்தவர் விவேக்._

*_இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதை பராமரிக்கவும் செய்து செய்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்._*

_இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டத்தோடு அதை பராமரிக்கவும் செய்து செய்திருக்கிறார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்._

About Admin

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி தனியார் நிறுவனங்களிடம் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster