Breaking News
Home / அரசியல் / ஜாதி வன்முறையை தூண்டும் திமுக, காங்., விசிக: முருகன் குற்றச்சாட்டு

ஜாதி வன்முறையை தூண்டும் திமுக, காங்., விசிக: முருகன் குற்றச்சாட்டு

ஜாதி வன்முறையை தூண்டும் திமுக, காங்., விசிக: முருகன் குற்றச்சாட்டு மதுரை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் முருகன் குற்றம்சாட்டினார்.மதுரையில் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜ.,வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பா.ஜ., தலைவர் முருகன் மதுரை வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.இதன் பிறகு முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட அனைத்து தகுதியும் பா.ஜ.,விற்கு மட்டும் தான் உள்ளது. பா.ஜ., ஆட்சியில் தான் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர் வாழ்ந்த 5 இடங்கள் நினைவு சின்னங்களாக மாற்றப்பட்டன. அவருக்கு மாலை அணிவிக்கவும், சொந்தம் கொண்டாடவும் பா.ஜ.,விற்கு அனைத்து உரிமையும் உள்ளது. அம்பேத்கரை ஜாதி தலைவராக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சி செய்கின்றனர். விடுதலை சிறுத்தைகளுக்கு அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை. இதனால், இதனை அரசியலாக்குகின்றனர். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுகின்றனர். பா.ஜ.,வினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Dailyhunt

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster