Breaking News
Home / செய்திகள் / அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் கோலாகலமாக கொண்டாடினர்

அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் கோலாகலமாக கொண்டாடினர்

அம்பேத்கரின் 130 வது பிறந்த நாளை பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் கோலாகலமாக கொண்டாடினர்:

அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் செயல் குடும்பம் குடியிருப்போர் பொது நலச்சங்கம் தலைவரும் சட்ட விழிப்புணர்வு இயக்கம் மாணவரணி மாநிலச் செயலாளருமான நித்தியானந்தன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகளை ஊக்குவிக்கும் விதமாக கால்பந்து போட்டி, நடனம்,சமூக விழிப்புணர்வு, நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் ராஜேஷ்குமார், முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன், சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரையாற்றினார். அப்பகுதியில் உள்ள இரவு நேர பாட சாலையில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெரும்பாக்கம் (எஸ் 16) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு,அதிமுக சென்னை புறநகர் மாவட்ட இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் பிரதாப் குமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வடசென்னை தெற்கு தனசேகர்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரும்பாக்கம் ஒருங்கிணைப்பாளர் தாமு,உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், புத்தகப்பை, உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினர்,சமத்துவ மலர்கள் கூட்டமைப்பு தலைவர் நல்லதம்பி, ஆர்.கே. கன்ஸ்டிரக்ஷன் நிறுவனர் வினோத்குமார்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தாமஸ், மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளூர் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பெரும்பாக்கம் செய்தியாளர்

A.அருண்

About Admin

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி தனியார் நிறுவனங்களிடம் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster