Breaking News
Home / அரசியல் / 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டம்

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டம்

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டம்

  •  சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறிச் சென்று விட்டதாகவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலையால் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நேற்று (ஏப்.,14) ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது. தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்து வரும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், கொரோனா தொற்று உயர்ந்து வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். இதில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம்: கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை, எல்லை மீறி சென்று விட்டது. தமிழகத்தில் போதிய அளவில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இருக்கிறது. 40 வயதானவர்களுக்கும் விரும்பினால் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster