Breaking News
Home / அரசியல் / அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…

அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…

  • அருமையான கற்பனை வளம் உங்களுக்கு, மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுக்கலாம்…                                      சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு, பா.ம.க., – பா.ஜ.,வில் சேர்ந்துவிடும். அ.தி.மு.க.,வில் ஒருசிலர் ஜெயித்தாலும், அவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து, தமிழகத்தில் எதிர்க்கட்சியாக, பா.ஜ., அமர வாய்ப்பிருக்கிறது.- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்’அருமையான கற்பனை வளம் உங்களுக்கு உள்ளது. மர்மக் கதை எழுதலாம் அல்லது சினிமா படமாக எடுத்தால் நன்கு ஓடும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு.தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதை நாங்கள் எதிர்த்த வழக்கில், அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட எந்த கருத்தும் கிடையாது. வல்லுனர்கள் நிறைந்த அந்த பொறுப்புக்கு, அவர் தகுதி உடையவர் அல்ல என்பது தான் எங்கள் நிலைப்பாடு.- சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தரராஜன்’எப்படியோ, ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியை எதிர்த்து, பிரபலமாகி விட்டீர்கள்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தரராஜன் அறிக்கை.கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதற்கான பரிசோதனைக் கட்டணம், பிற மாநிலங்களில், 600 – 800 ரூபாயாக இருக்கையில், தமிழகத்தில் மட்டும், 1,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழிப்பறி கொள்ளையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்’கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டியது அவசியம் தான்…’ என, கூறத் தோன்றும் வகையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.அன்புமணி ராமதாஸ் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதா; படிச்சவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க என்று, பா.ம.க.,வினர் புலம்புகின்றனராம்.- மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன்’அப்படி எல்லாம் எல்லாரும் கிளம்பவில்லை. கம்யூ.,க்கள், தி.மு.க.,காரர்கள் மட்டும் தான் கிளம்பியிருக்கின்றனர்…’ என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை.படித்திருந்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன…
  • எதிரணி வேட்பாளரை, பொறுக்கி என பேசும் அநாகரிகம் என்னிடம் இல்லை. கண்ணியமே என் படிப்பும், தகுதியும். எப்போதும் நான் திருமாவளவன் பக்கமே.- எழுத்தாளர் சுப.வீரபாண்டியன்’அன்புமணி சொன்ன அர்த்தம் வேறு; அவரின் எதிரணி ஆட்களான நீங்கள் எல்லாரும் வலியுறுத்தும் விதம் வேறு. வாய்ப்பு கிடைத்தால், எதிராளியை அமுக்கி விடுவீர்களே…’ என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், எழுத்தாளர் சுப.வீரபாண்டியன் அறிக்கை.
  • Dailyhunt

About Admin

Check Also

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster