Breaking News
Home / கிரிக்கெட் / மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டம்

IPL 2021 Live : ஐபிஎல் லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. அன்று நடந்த தொடரின் துவக்க லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சிடம் தோல்வியைத் தழுவியது. மறுபுறம் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று முன்தினம் நடந்த முதல் லீக் போட்டியில் 10 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் தொடரின் 5வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்கவுள்ள கேப்டன் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி, அதன் பேட்டிங் வரிசையில் மிகவும் வலுவாக உள்ளது. அந்த அணியில் உள்ள நிதிஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஆந்த்ரே ரஸ்செல், இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். மேலும் அந்த அணியின் பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது.

தொடரின் துவக்க ஆட்டத்திலேயே தடுமாற்றம் கண்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, மீண்டும் வலுவான பேட்டிங் வரிசையோடு வரும் என நம்பலாம். பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் பேட்டிங் வரிசையில் அந்த அணி நிலை குழைந்தது. மேலும் அந்த அணியின் பந்து வீச்சும் மெச்சும் வகையில் இல்லை. எனவே அதில் சில மாற்றங்களை கொண்டு வரும் என நம்பலாம்.

மும்பை அணியின் துவக்க வீரர் குயின்டான் டி காக்கின் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து விட்ட நிலையில், இன்றைய போட்டியில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங், பந்து வீச்சு என அனைத்து பிரிவுகளிலும் வலுவாக உள்ள இந்த இரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் எந்த அணி அதிரடி காட்டி அசத்தும் என்ற ஆவல் கிரிக்கெட் ரசிகர்களிடமும் தொற்றிக் கொண்டுள்ளது.

Live Updates

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு!

மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 5வது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற அணி கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

பொல்லார்ட்டுக்கான மைல்கல்…!

கீரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் 200 சிக்ஸர்களை முடிக்க இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே உள்ளது. மற்றும் அவர் 200 பவுண்டரிகளை அடைய அவருக்கு இன்னும் மூன்று பவுண்டரிகள் தேவை.

ஹார்டிக் பாண்ட்யா காயம்?

மும்பை அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஹார்டிக் பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணியின் துவக்க வீரர் யார்?

பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குயின்டன் டி கோக், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே இன்றைய ஆட்டத்தில் அவர் களம் காணுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய கிறிஸ் லின், 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்)

நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷாகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், பிரசீத் கிருஷ்ணா, ஹர்பஜன் சிங் மற்றும் வருண் சக்ரவர்த்தி

மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ)

ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரோன் பொல்லார்ட், ஹார்டிக் பாண்ட்யா, கிருனல் பாண்ட்யா, ராகுல் சாஹர், மார்கோ ஜான்சன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா.

இரு அணி வீரர்களின் பட்டியல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஈயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், சுப்மான் கில், நிதீஷ் ராணா, டிம் சீஃபர்ட், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சிவம் மாவி, லாக்கி பெர்குசன், பாட் கம்மின்ஸ், கம்லேஷ் நாகேதர்கோடி கிருஷ்ணா, ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, ஹர்பஜன் சிங், கருண் நாயர், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர், பவன் நேகி.

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், மொஹ்சின் கான், ஹார்டிக் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், கீரோன் பொல்லார்ட் , இஷான் கிஷன், குயின்டன் டி கோக், ஆதித்யா தாரே, ஆடம் மில்னே, நாதன் கூல்டர் நைல், பியூஷ் சாவ்லா, ஜேம்ஸ் நீஷம், யுத்வீர் சரக், மார்கோ ஜான்சன், அர்ஜுன் டெண்டுல்கர்.

Thanks to Dailyhunt

About Admin

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி தனியார் நிறுவனங்களிடம் கரோனா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MyHoster